சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

Exit poll 2019: கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விசிக.. ஆனால் லோக்சபாவில் சிக்கலை சந்திக்குமே!

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு

    சென்னை: எக்சிட் போல் முடிவுகளின்படி கொடுத்த தொகுதிகளில் முழு வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் லோக்சபாவில் சிக்கலை சந்திக்கக் கூடும் என தெரிகிறது.

    திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறை இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டனர்.

    தேர்தலில் இவர்களுக்கு நட்சத்திரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் திருமாவளவன் தேர்தல் ஆணையம் வழங்கிய பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

    வரணும்.. ரஜினி வரணும்.. உடனே வரணும்.. இப்ப இதுதான் தேவை.. பிரவீன் காந்த் வரணும்.. ரஜினி வரணும்.. உடனே வரணும்.. இப்ப இதுதான் தேவை.. பிரவீன் காந்த்

    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    விடுதலை சிறுத்தைகள் கட்சி

    நாடாளுமன்றத் தேர்தல் ஞாயிற்றுக்கிழமையுடன் நடந்து முடிந்து விட்டது. இந்த நிலையில் நேற்று முன் தினம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இந்த கருத்துக் கணிப்புகளில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கூறப்பட்டுள்ளது.

    கவனிக்கப்பட வேண்டியது

    கவனிக்கப்பட வேண்டியது

    இந்த நிலையில் இது போல் கருத்து கணிப்புகளின் படி இவர்கள் இருவரும் வெற்றி பெற்றால் நாடாளுமன்றத்தில் பெரும் சிக்கல் எழ வாய்ப்புள்ளது. திமுகவின் உதயசூரியன் சின்னத்தி்ல் போட்டியிட்ட ரவிக்குமார் திமுகவின் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவனுக்கு அது போன்ற ஒரு நிர்பந்தம் கிடையாது. இது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயமாகும்.

    5 இடங்களில்

    5 இடங்களில்

    மாநில கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சி கேட்டு பெற்ற 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுவிடுமாம். அது போல் தமிழிசை வறுத்தெடுத்த மதிமுகவும் தனக்கு ஒதுக்கப்பட்ட ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுவிடுமாம். ஆக இந்த கட்சிகள் இரண்டும் முழு வெற்றியை பெற்றுவிடும் என கணிப்புகள் கூறுகின்றன. ஆனால் தேசிய கட்சியான பாஜகவுக்கோ தமிழகத்தில் ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் ஒரு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என கணிப்புகளில் கூறப்பட்டுள்ளது.

    பாஜக

    பாஜக

    விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக ஆகியோரெல்லாம் போட்டியிட்ட தொகுதிகளில் முழு அளவு ஜெயிக்கும்போது தேசியக் கட்சி, தேசிய ஆளும் கட்சி ஒரு இடத்தில்தான் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. அதுவும் தமிழிசை வெற்றி பெற இயலாத நிலை. பொன் ராதாகிருஷ்ணனின் வெற்றியே கூட டவுட்டாக இருக்கிறது. காரணம், மக்கள் ஒட்டுமொத்த வெறுப்பில் உள்ளனர். இனியாவது தமிழக மக்களின் மனதைப் புரிந்து தமிழக பாஜக நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    As per Exit poll results, if VCK will win in both the 2 constituencies then it will create problem in Parliament
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X