• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

காரைக்குடியில் ஜெயிக்கப் போவது.. "அவர்" இல்லையாம்.. "இவர்"தானாம்.. தந்தி டிவி பலே கணிப்பு!

Google Oneindia Tamil News

சென்னை: காரைக்குடி சட்டசபை தொகுதியில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜாவுக்கு தோல்வி முகம் இருக்கும் என தந்தி டிவி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

    Exit poll 2021: திமுக கூட்டணி 133 இடங்களில் வெல்லும்.. தந்தி டிவி கணிப்பு

    தமிழகத்தில் 234 தொகுதிகளில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்புகள் வெளியாகியுள்ளன.

    அதில் தந்தி டிவி வெளியிட்ட தொகுதிவாரியான கருத்துக் கணிப்பில் காரைக்குடி சட்டசபைத் தொகுதியில் யார் வெல்ல போவது என்பது குறித்து தெரிவித்துள்ளது.

    Exit Poll 2021: எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்த தென்தமிழகம்.. இனி திமுகவசம்?Exit Poll 2021: எம்ஜிஆர் காலம் முதல் அதிமுகவின் கோட்டையாக இருந்த தென்தமிழகம்.. இனி திமுகவசம்?

    அதிமுக கூட்டணி

    அதிமுக கூட்டணி

    காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா போட்டியிட்டார். அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மாங்குடி என்பவர் போட்டியிட்டார். இவர்களில் பாஜகவின் எச் ராஜாவின் வெற்றி வாய்ப்பு குறித்து மிகவும் எதிர்பார்ப்பு எழுந்தது.

    மாங்குடி

    மாங்குடி

    இந்த நிலையில் இந்த தொகுதியில் எச் ராஜாவுக்கு தோல்விக்கே வாய்ப்பு என கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் மாங்குடியே வெல்வார் என தெரிகிறது.

    கார்த்தி சிதம்பரம்

    கார்த்தி சிதம்பரம்

    நாடாளுமன்றத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட எச் ராஜாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கார்த்தி சிதம்பரமே வென்றார்.

    பாஜக

    பாஜக

    அது போல் 2001-ஆம் ஆண்டு காரைக்குடியில் பாஜக சார்பில் போட்டியிட்ட எச் ராஜா வென்றுள்ளார். அதன் பிறகு 2006 இல் பாஜக சார்பில் ஆலந்தூரில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். 2016இல் தி நகரில் போட்டியிட்டும் தோல்வி அடைந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும் ஒரு முறை கூட எச் ராஜா வெல்லவில்லை. தமிழக சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு 2017 இல் போட்டியிட்ட எச் ராஜாவுக்கு தோல்வியே கிடைத்தது.

    English summary
    Thanthi Exit Poll 2021: BJP's H. Raja will lose in Karaikudi constituency.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X