சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா?.. இதோ புதிய கருத்து கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு

    சென்னை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் எந்த தொகுதியில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பது குறித்து தொகுதி வாரியான புதிய கருத்து கணிப்பை இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா வெளியிட்டுள்ளது.

    வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கிறது. நாளை மறுதினம் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளை அனைத்து ஊடகங்களும் விவாதித்து வருகின்றன.

    இந்த நிலையில் இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா நாடு முழுவதும் உள்ள லோக்சபா தொகுதி வாரியாக வெற்றி வாய்ப்பு குறித்த புதிய கருத்து கணிப்பை வெளியிட்டுள்ளன.

    நல்லா கேட்டுக்கங்க.. 23ம் தேதி காலை எண்ண ஆரம்பிப்பாங்க.. நைட்டுக்கு மேல்தான் ரிசல்ட் தெரியும்! நல்லா கேட்டுக்கங்க.. 23ம் தேதி காலை எண்ண ஆரம்பிப்பாங்க.. நைட்டுக்கு மேல்தான் ரிசல்ட் தெரியும்!

    திமுகவுக்கு

    திமுகவுக்கு

    அதன்படி திமுகவுக்கு சென்னை வடக்கு, சென்னை தெற்கு, சென்னை சென்ட்ரல், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு இருக்கும் என தெரிகிறது.

    12 தொகுதிகள்

    12 தொகுதிகள்

    நேற்று முன் தினம் வெளிவந்த நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்பில் திமுகவுக்கு 12 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அதில் சென்னை சென்ட்ரல், சென்னை வடக்கு, சென்னை தெற்கு, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நீலகிரி, சேலம், ஸ்ரீபெரும்புதூர், தஞ்சை, தூத்துக்குடி ஆகிய 12 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டிருந்தது.

    மாபெரும் வெற்றி

    மாபெரும் வெற்றி

    ஆனால் இன்று வந்த புதிய தகவலின்படி கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகவே இருக்குமாம். இப்படியாக கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

    கருத்து கணிப்புகள்

    கருத்து கணிப்புகள்

    கருத்து கணிப்புகளை அரசியல் கட்சிகள் யாரும் நம்ப வேண்டாம் என்கின்றனர். இன்னும் சில கட்சிகளோ கருத்து கணிப்புகள் தங்களுக்கு சாதகமாக வந்தாலும் சரி பாதகமாக வந்தாலும் சரி அதை பற்றி கவலைப்படுவதில்லை என்கின்றன. எனவே பொறுத்தது பொறுத்தோம். இன்னும் ஒரே நாள்தான்.

    English summary
    As per exit polls DMK may get these seats in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X