சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்.. எக்ஸிட் போல்களில் இடமில்லை.. மே 23 உற்சாகம் தருமா கமல் கட்சிக்கு!

Google Oneindia Tamil News

சென்னை: நம்மவர் என கமலை மக்கள் நீதி மய்யம் பிரச்சாரம் செய்த நிலையில் அவருக்கு இந்த முறை ஒரு இடங்கள் கூட கிடைக்க வாய்ப்பு இல்லை என்று சொல்லியதாடு, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என ஆசைப்பட்டு நடிகர்கள் அவ்வப்போது அரசியலில் இறங்குவார்கள்.

அந்த வரிசையில் தமிழகத்தின் உச்ச நடிகர்களில் ஒருவான கமல் ஹாசன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார்.

கமலின் முயற்சி

கமலின் முயற்சி

மக்களவை தேர்தலுக்கு முன்பு தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார், சமூக ஊடகங்கள் வழியாகவும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி வழியாகவும் மக்களிடம் பலவிஷயங்ள் குறித்து பேசினார்.

கமலின் கிராம கூட்டங்கள்

கமலின் கிராம கூட்டங்கள்

கிராமங்களை தேடி பயணம் செய்த கமல் ஹாசன் உள்ளாட்சி கூட்டங்களை நடத்தி மக்கள் மத்தியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்த முயற்சித்தார். கிராம மக்களிடம் என்ன பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் என தேடி சென்று அறிந்து பேசி வந்தார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

இதேபோல் ஊழலுக்கு எதிரான பல நம்பிக்கை அளிக்கும் கருத்துக்களை மக்களிடம் பரப்பினார். அதேநேரம் அதிமுக மற்றும் திமுகவை கடுமையாக விமர்சித்தாலும், என்ன மாற்றம் வரும் என்பதை சொல்லி சொல்லி வாக்குசேகரித்தார்.

கமலின் கட்சி வெல்லாது

கமலின் கட்சி வெல்லாது

இப்படி நம்பிக்கை அளித்து பேசி தனது டார்ச் லைட்டுக்கு வாக்கு கேட்ட கமலுக்கு தேசிய மற்றும் மாநில ஊடங்கள் ஒரு தொகுதியில் கூட வெல்ல வாய்ப்பு இல்லை என கூறி பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் என சொல்லியிருக்கின்றன.

ஓட்டு சதவீதம்

ஓட்டு சதவீதம்

மே 23ம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் போது கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி வெல்லுமா அல்லது ஓட்டுக்களை குறீப்பிட்ட அளவு வாங்கி வாக்கு வங்கியை உயர்த்துமா என்பது தெரிந்துவிடும்.

English summary
lok sabha elections 2019: kamal haasan's makkal needhi maiam did not get single seat in lok sabha polls
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X