சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எக்சிட் போல்: தனியொருவனாக மீண்டும் லோக்சபா எம்பியாகும் அன்புமணி.. அப்ப அந்த ராஜ்யசபா எம்பி பதவி?

Google Oneindia Tamil News

சென்னை: பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றால் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கொடுப்பதாக கூறிய நிலையில் தற்போதைய கருத்து கணிப்பு முடிவுகளை பார்த்தால் அக்கட்சிக்கு அப்பதவி கிடைக்காது என்றே தெரிகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் யார் யாருடன் கூட்டணி என்பது குறித்த பேச்சுவார்த்தைகள் நடத்தி கொண்டிருந்த போது அதிமுகவை ஊழல் கட்சி என்றே விமர்சனம் செய்து வந்த பாமக திடீரென அதிமுகவுக்கு ஆதரவு அளித்தது.

இதையடுத்து பாஜகவுக்கு 5 இடங்கள் வழங்கிய நிலையில் பாமகவுக்கோ 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

கேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம் கேம் ஆரம்பம்.. மத்திய பிரதேச அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க கோரும் பாஜக- ஆளுநருக்கு கடிதம்

பாஜக உறுதி

பாஜக உறுதி

இந்த நிலையில் பாமக 7 தொகுதிகளில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றால் பாமகவுக்கு போனஸ் பாயிண்ட்டாக ஒரு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என பாஜக உறுதியளித்ததாக செய்திகள் வெளியாகின.

கருத்து கணிப்புகள்

கருத்து கணிப்புகள்

இதனால் இந்த உற்சாக மிகுதியில் பாமகவும் களத்தில் இறங்கி வேலை பார்த்தது. இந்த நிலையில் நேற்றுடன் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்தது. இதையடுத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.

பாமக தோற்கும்

பாமக தோற்கும்

அதில் நியூஸ் எக்ஸ் நிறுவனத்தின் கருத்து கணிப்புகளின்படி, பாமக போட்டியிட்ட 7 தொகுதிகளில் தருமபுரி தொகுதியில் மீண்டும் எம்பியாக தேர்வு செய்யப்படுகிறாராம் அன்புமணி. மற்ற 6 தொகுதிகளில் பாமக தோற்கும் என கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

ஒரு இடத்தில் மட்டும்..

ஒரு இடத்தில் மட்டும்..

இதனால் பாஜக உறுதியளித்தபடி அக்கட்சிக்கு மாநிலங்களவை எம்பி கிடைக்காது என்றே தெரிகிறது. கருத்து கணிப்புகளின் முடிவுகளின்படி 4 இடங்களில் போட்டியிட்ட தேமுதிகவும் 7 இடங்களில் போட்டியிட்ட பாமகவும் தலா ஒரு இடங்களில் மட்டுமே வெற்றி பெறுமாம்.

English summary
Exit poll says that Anbumani Ramadoss only win in Loksabha election which it contested in 7 lok sabha seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X