சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

28 ஆண்டுக்கு பிறகு தென்காசியில் திமுக போட்டி.. முயற்சி வீண் போகுமா?.. எக்சிட் போல் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

சென்னை: 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக போட்டியிடுவதால் தென்காசி நிச்சயம் அக்கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் கூறுகின்றன.

சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய 6 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதுதான் தென்காசி எம்பி தொகுதி ஆகும்.

காங்கிரஸின் கோட்டை என சொல்லப்படும் தென்காசி தொகுதியில் திமுக கடந்த 1991-ஆம் ஆண்டு போட்டியிட்டது. அதுவும் தற்போது கூட்டணி கட்சியாக உள்ள காங்கிரஸை எதிர்த்து.

கட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன? தோப்பு வெங்கடாசலம் பரபர! கட்சி பதவியை உதறியாச்சு.. அடுத்து என்ன? தோப்பு வெங்கடாசலம் பரபர!

கூட்டணி கட்சி

கூட்டணி கட்சி

அந்த தேர்தலில் திமுக தோல்வியுற்றது. அதைத் தொடர்ந்து அந்த தொகுதியில் திமுக போட்டியிட்டதே கிடையாது. மாறாக அந்த தொகுதியை கூட்டணி கட்சிக்கு வழங்கிவிடும்.

நேரடி போட்டி

நேரடி போட்டி

இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக தலைவரான ஸ்டாலின் 28 ஆண்டுகளுக்கு பிறகு தென்காசியில் நேரடியாக களம் காண்பது என முடிவு செய்தார். அதன்படி அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிட வேட்பாளரை அறிவித்தார்.

வெற்றி பெற வாய்ப்பு

வெற்றி பெற வாய்ப்பு

வாக்கு எண்ணிக்கை வரும் 23-ஆம் தேதி நடைபெறும் நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் தென்காசியில் திமுகவுக்கு வெற்றி பெற வாய்ப்புகள் அதிகம் என கூறப்பட்டுள்ளது.

பொறுப்போம்

பொறுப்போம்

இந்த கருத்து கணிப்புகள் குறிப்பிட்ட தொகுதியில் கட்சியின் பிரபலத்தை வைத்து கணிக்கப்பட்டுள்ளது. ஆக்க பொறுத்த நாம், ஆறவும் பொறுப்போம். இன்னும் ஒரு நாள்தானே!

English summary
Exit poll says that DMK will have winning chance in Tenkasi LS seat where it contested after 28 years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X