சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2 ஆவது முறை எம்பியாகிறாரா?

Google Oneindia Tamil News

சென்னை: பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் 2-ஆவது முறையாக எம்பியாவார் என எக்சிட் போல் முடிவுகள் கணித்துள்ளன.

தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றாக திகழும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் முதல் முறையாக 1999-ஆம் ஆண்டு சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து போட்டியிட்டு கடந்த 2009-இல் எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பின்னர் மக்கள் நல கூட்டணி சார்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு காட்டுமன்னார்கோவில் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவிடம் தோல்வி அடைந்தார்.

திமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்? இந்த கணிப்பை பாருங்க! திமுகவின் வாக்குகளை பிரிக்கும் கமல்.. எதிர்காலத்தில் விஸ்வரூபம் எடுப்பார்? இந்த கணிப்பை பாருங்க!

விழுப்புரம், சிதம்பரம்

விழுப்புரம், சிதம்பரம்

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு இந்த முறை இரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. சிதம்பரம் தொகுதியில் தொல் திருமாவளவனும், விழுப்புரம் தொகுதியில் ரவிக்குமாரும் போட்டியிட்டனர்.

உதயசூரியன்

உதயசூரியன்

தேர்தலில் இவர்களுக்கு நட்சத்திரம் சின்னம் வழங்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இதையடுத்து திமுகவோ உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுமாறு அறிவுறுத்தியது.

பானை சின்னம்

பானை சின்னம்

எனினும் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு, ரவிக்குமார் திமுகவின் உதயசூரியன் சின்னத்திலும் திருமாவளவன் தேர்தல் ஆணையம் வழங்கிய பானை சின்னத்திலும் போட்டியிட்டனர்.

வெற்றி பெறுவார்

வெற்றி பெறுவார்

இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் பானை சின்னத்தில் போட்டியிட்ட திருமாவளவன் வெற்றி பெறுவார் என கணிப்புகள் கூறுகின்றன.

English summary
VCK Chief Thirumavalavan will win in Chidambaram constituency? Exit poll says.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X