சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1+1.. பாஜகவே வெல்லும்.. அடித்து சொன்ன எக்ஸிட் போல்.. குஜராத்தில் பலித்தது.. ஹிமாச்சலத்தில் கவிழ்ந்தது

இன்றைய தேர்தல் ரிசல்ட்டில் குஜராத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, இரு மாநிலங்களிலுமே பாஜக வெற்றி பெறும் என்ற கணிப்பு தவிடுபொடியாகி உள்ளது.. எதிர்பாரா விதமாக ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.

மொத்தம் 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநிலத்தில் டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியானது.

மேலும், இவ்விரு மாநிலங்களில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

திடீர் ட்விஸ்ட்.. இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி.. பாஜகவுக்கு பெரிய அடி.. மாறிப்போன கருத்து கணிப்புகள் திடீர் ட்விஸ்ட்.. இமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி.. பாஜகவுக்கு பெரிய அடி.. மாறிப்போன கருத்து கணிப்புகள்

 மும்முனைப்போட்டி

மும்முனைப்போட்டி

ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுமே தேசமே பரபரப்பாகிவிட்டது. வழக்கமாக காங்கிரஸ் & பாஜக என்று இரு கட்சிகள் மட்டுமே நேருக்கு நேர் தேர்தலை சந்தித்து வந்த நிலையில், இந்த முறை ஆம் ஆத்மியும் இணைந்து, மும்முனை போட்டியை ஏற்படுத்தின. 3 கட்சிகளின் பிரதான தலைவர்களும், 2 மாநிலங்களுக்கும் நேரடியாகவே வந்து பிரச்சாரத்தை நடத்தினார்கள்..

 ஆட்சி கவிழ்ப்பு

ஆட்சி கவிழ்ப்பு

பின்னர், ஹிமாச்சலப் பிரதேசம் - குஜராத் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.. ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்ற இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின.. அதேபோல், குஜராத் மாநிலத்தில் முதல் மற்றும் இரண்டாம் இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. ஹிமாச்சல பிரதேசத்தை ஆட்சியை பிடிக்க 35 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும்... குஜராத் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்த இரு மாநிலங்களிலுமே ஏற்பட்டு வந்தது..

 பிரதான வெற்றி

பிரதான வெற்றி

2 தினங்களுக்கு முன்பு, எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின.. குஜராத், இமாச்சலப் பிரதேசம் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலை வைத்து, யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற கணிப்பு வெளியானது. இந்த 2 மாநிலங்களிலுமே ஏற்கனவே பாஜக ஆட்சியில் உள்ள நிலையில், மறுபடியும், பாஜகவே இந்த 2 மாநிலங்களிலும் பிரதான வெற்றியை தக்க வைக்க போவதாக கூறின.

 கணிப்புகள்

கணிப்புகள்

குறிப்பாக, நியூஸ் எக்ஸ் வெளியிட்டிருந்த எக்ஸிட் போலில், குஜராத்தில் பாஜக 117 - 140 இடங்களில் வெற்றிபெறும், காங்கிரஸ் 34 - 51 இடங்களிலும், ஆம் ஆத்மி 6 - 13 இடங்களிலும் வெல்லும் என்றும் நியூஸ் கணிப்பில் கூறப்பட்டிருந்தது.. அதாவது, காங்கிரசுக்கும், பாஜகவுக்குமான வெற்றி விகிதம் கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமாக தெதன்பட்டது.. அதுபோலவே, என்டிடிவி வெளியிட்டிருந்த எக்ஸிட் போலிலும் பாஜக 128 இடங்களை பிடிக்கும் என்றும் காங்கிரஸ் கட்சி 55 இடங்களையும், ஆம் ஆத்மி 7 இடங்களை பெறும், மற்றவை 3 இடங்கள் என்றும் என்டிடிவி தெரிவித்திருந்தது.

கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு

ரிபப்ளிக் டிவி - பி. மார்க் வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பிலும், குஜராத்தில் பாஜக 128 தொகுதிகள் முதல் 148 தொகுதிகள் வரை வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணித்தது. காங்கிரஸ் 30 முதல் 42 தொகுதிகள் வரையிலும், ஆம் ஆத்மி 2 முதல் 10 தொகுதிகள் வரையிலும் வெற்றி பெறும் என்றும் கணித்திருந்தது. அதேபோல, டிவி9 குஜராத்தி வெளியிட்டிருந்த கருத்துக்கணிப்பில், பாஜக 125 தொகுதிகள் முதல் 130 தொகுதிகள் வரையும், காங்கிரஸ் 40 முதல் 50 இடங்கள் வரையிலும், ஆம் ஆத்மி கட்சி 3 முதல் 5 இடங்கள் வரையிலும் வெற்றி பெறும் என்று கூறியிருந்தது.

 பொய்த்து போன

பொய்த்து போன

P-MARQ கருத்துக்கணிப்புப்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 34-39 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி 28-33 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 0-1 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது. ஜன் கி பாத் Jan Ki Baat கருத்துக்கணிப்புப்படி, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 32-40 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும், காங்கிரஸ் கட்சி 27-34 தொகுதிகளில் வெற்றி பெறும், ஆம் ஆத்மி 0, இதர கட்சிகள் 1-2 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணித்திருந்தது. டைம்ஸ்நவ் கருத்துக்கணிப்பானது, இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் 38 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றது.

ரிசல்ட்கள்

ரிசல்ட்கள்

இரு மாநிலங்களிலுமே பாஜக வெற்றி பெறும் என்று சொன்னதால், பாஜக குஷியில் இருந்தது.. இன்று காலை தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பித்தன. இதில், இமாச்சல பிரதேசத்தில், அனைத்து கருத்து கணிப்புகளையும் நொறுக்கிவிட்டது காங்கிரஸ் கட்சியின் ரிசல்ட்.. முற்பகல் வரை முன்னே பின்னே என மாறி மாறி வந்து கொண்டிருந்த ரிசல்ட், மதியம் 12.30 மணியளவில் 40 இடங்களில் முன்னிலையில் சென்று, பாஜகவை பின்தங்கவிட்டது.. இறுதியில் ஆட்சியையே இழக்கும் நிலைக்கு பாஜக அங்கு தள்ளப்பட்டுவிட்டது.

 ஏகப்பட்ட சான்ஸ்

ஏகப்பட்ட சான்ஸ்

இங்கு மொத்தம் 68 தொகுதிகள் உள்ள நிலையில் ஆட்சியமைக்க 35 இடங்களில் வெற்றி கட்டாயமாகும். இதனால் காங்கிரஸ் கட்சி 40 தொகுதிகளில் மதியமே முன்னிலைக்கு வந்துவிட்டது. பாஜக 24 இடங்களை கைப்பற்றிய நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆம் ஆத்மி இங்கு மண்ணை கவ்வியுள்ளது. குஜராத் தேர்தலை பொறுத்தவரை, எக்ஸிட் போல் குறிப்பிட்ட கருத்து கணிப்புகளையும் தாண்டி, பாஜக அபார வெற்றியை பெற்றுள்ளது..

தவிடுபொடி

தவிடுபொடி

டிவி கருத்து கணிப்பில் மட்டுமே பாஜக 148 தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு என்று அதிகபட்ச எண்ணிக்கையை தெரிவித்திருந்தது.. ஆனால் இன்று குஜராத்தில் பாஜக 156 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.. காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை, அனைத்து எக்ஸிட் போல்களிலுமே குறைந்தபட்சம் 25 தொகுதிகளுக்கு மேல்தான் எண்ணிக்கையே ஆரம்பமானது.. 25 முதல் 55 இடங்கள் வரை காங்கிரசுக்கு கிடைக்கலாம் என்று அதிகபட்சமாக கணிக்கப்பட்டது.

 பொய்த்து போனது

பொய்த்து போனது

ஆனால், குஜராத்தில் வெறும் 17 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றிருப்பது கவலையையும், அதிர்ச்சியையும் தொண்டர்களுக்கு உண்டாக்கி வருகிறது. காங்கிரசுக்கு மாற்று, அதாவது பாஜகவுக்கு எதிர்க்கட்சியாக அமைய போவது, புதுவரவான ஆம் ஆத்மி என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெறும் 5 இடங்களை பெற்றுள்ளது. ஆக, இந்த முறை வெளியான எக்ஸிட் போல்களை பொறுத்தவரை, 2 மாநிலங்களில், குஜராத்தில் மட்டுமே அதன் கணிப்பு நிரூபணமாகி உள்ளது.. 2 மாநிலங்களிலுமே பாஜக வெற்றி பெறும் என்ற கணிப்பு பொய்த்து போய்விட்டது!!

English summary
Exit polls and Gujarat + Himachal Pradesh Assembly Election results 2022
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X