சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

புதிய சக்திகளாக உருவெடுக்கும் கமல், டிடிவி, சீமான்.. கருத்து கணிப்புகள் சொல்லும் சேதி இதுதான்!

Google Oneindia Tamil News

Recommended Video

    Thanthi TV Exit polls : செம போட்டி கேரண்டி.. தந்தி டிவி எக்ஸிட் போல்

    சென்னை: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை பார்த்தோமேயானால் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், தினகரனின் அமமுக, சீமானின் நாம் தமிழர் ஆகியவை திமுக, அதிமுகவுக்கு பெரும் சவால்களாக உருவெடுக்கவுள்ளது தெரிய வருகிறது.

    அதிமுகவின் வாக்குகளை பிரிக்கும் சக்திகளாக இவை உருவெடுத்துள்ளன. மறைமுகமாக இவர்கள் திமுகவுக்கே பலன் கொடுத்துள்ளனர். தேர்தலுக்கு பிறகு இவர்கள் மூவரும் மிகப் பெரிய சக்திகளாக மாற வாய்ப்புள்ளது. ஏன் இணைந்து கை கோர்க்கவும் கூட வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

    லோக்சபா தேர்தல் நேற்றுடன் இறுதி கட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் நேற்று மாலைக்கு மேல் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. திமுக அதிக இடங்களைப் பெறும் எனக் கூறப்பட்டுள்ளது. அதை விட முக்கியமானது புதிய சக்திகளாக உருவெடுத்துள்ள மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவைதான்.

    உத்தரப்பிரதேசத்தில் 'ஒர்க் அவுட்' ஆகாவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி? உத்தரப்பிரதேசத்தில் 'ஒர்க் அவுட்' ஆகாவில்லையா மாயாவதி- அகிலேஷ் கூட்டணி?

    போட்டி

    போட்டி

    இவை இரண்டும், அமமுகவுடன் சேர்ந்து அதிமுகவை காலி செய்துள்ளன. அதிமுகவிடம் கடந்த முறை 38 தொகுதிகள் தமிழகத்தில் இருந்தன. அதில் பாதிக்கும் மேலானதை தற்போது இழக்கப் போவதாக தெரிகிறது. இதற்குக் காரணம் அமமுக, மநீம மற்றும் நாம் தமிழர் பிரிக்கும் வாக்குகளே.

    குறை கேட்டல்

    குறை கேட்டல்

    லோக்சபா தேர்தலில் இந்த கட்சிகள் கணிசமான வாக்குகளை பெறும் என்றே தெரிகிறது. அதிமுகவின் ஓட்டுகளை பிரிக்க காரணம் என்னவாக இருக்கும் என்பதை பார்ப்போம். கமல்ஹாசனின் தேர்தல் பிரசார யுத்திகள் புதிதாகவும் வித்தியாசமாகவும், மக்களை ஈர்க்கும் வகையிலும் இருந்தன. தேர்தலுக்கு முன்பே அவர் மக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து கொண்டார்.

    பணம் வாங்காதீர்

    பணம் வாங்காதீர்

    அவரது பிரசாரத்திலும் மக்கள் மாற்றத்தை ஏற்க வேண்டும். பணம் வாங்காதீர் போன்ற அனல் பறக்கும் பேச்சுகள் இருந்தன. அதுபோல் தினகரனும் திமுகவை விட அதிமுக மீது கடுங்குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். நியூஸ் எக்ஸ் கருத்து கணிப்புகளில் அமமுகவுக்கு 5 இடங்கள் கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே தினகரனின் அமமுக கட்சி அதிமுகவுக்கு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும் என்று ஊகிக்க முடிகிறது.

    பெரும் சக்திகள்

    பெரும் சக்திகள்

    அது போல் அதிமுக வாக்குகளை பிரித்ததில் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கும் பங்குண்டு. ஆர் கே நகர் தேர்தலில் பாஜகவை காட்டிலும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தது சீமான் கட்சி. இந்த 3 கட்சிகளையும் அதிமுக அலட்சியமாக நினைத்ததே இவர்களின் அசால்ட் வெற்றிக்கு காரணமாகும். அதேசமயம், திமுக உஷாராக இல்லாவிட்டால் அக்கட்சிக்கும் இவர்களால் ஆபத்து உண்டு. மொத்தத்தில் தேர்தலுக்கு பிறகு இந்த 3 கட்சிகளும் மிகப் பெரிய சக்திகளாக மாற வாய்ப்புள்ளது என்பது மட்டும் தெரிகிறது.

    English summary
    Lok sabha election Exit polls says Kamal Hassan, Seeman will become a big force after polls.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X