சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா ஒழிந்தாலும் அதிகரிக்கும் மன அழுத்தம் எச்சரிக்கும் நிபுணர்கள் - மதுரையில் கவுன்சிலிங்

கொரோனா பிரச்னை ஒய்ந்த பிறகு, பல நாடுகளில் மனநோயாளியாக மாறியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். மதுரையில் மன அழுத்தத்தில் இருந்து மீள கவுன்சிலிங்க வழங்கப்படுகி

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா லாக் டவுனால் வேலையில்லையே, சம்பளம் வரலையே வீட்டு செலவுக்கு என்ன செய்வது குடும்பத்தை எப்படி காப்பாற்றுவது என்று பலரது மனதிலும் எழும் கேள்வி. இதுவே மன அழுத்தத்தை ஏற்படுத்து பலரையும் மன நோயாளிகளாக மாற்றி விடுகிறதாம். கொரோனா நோய் தொற்று பரவ ஆரம்பித்த பின்னர் தற்போது ஏராளமானோர் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருவதாகவும் கொரோனா பிரச்சினை ஓய்ந்த பின்னரும் மன நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நோயாளிகள் மன அழுத்தத்தில் இருந்து மீள மதுரையில் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க ஒரு கோடி பேரை பாதித்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுக்க அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் பலரது வேலையை காலி செய்துள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்கள் முழுவதுமே முடங்கிப்போனது. போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சாலையோரங்களில் கடை வைத்திருந்தவர்கள் மட்டுமல்ல பெரிய பெரிய ஷாப்பிங்மால்களில் வேலை செய்தவர்களுக்கும் வேலையில்லை.

இதனால் நிதி நெருக்கடி பலரது குடும்பத்திலும் ஏகப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவே மனரீதியான பிரச்சினையாக மாறி சண்டைகளை அதிகரித்து வருகிறது. நோய் பற்றிய அச்சம் மட்டுமல்லாமல் பொருளாதார நெருக்கடியால் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் அதிக அளவில் மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

அவரு சொன்னாருன்னு இவரு சொன்னதாக அவங்க சொன்னாங்க- ரஜினி குறித்து திமுக எம்.பி செந்தில்குமார் ட்வீட்அவரு சொன்னாருன்னு இவரு சொன்னதாக அவங்க சொன்னாங்க- ரஜினி குறித்து திமுக எம்.பி செந்தில்குமார் ட்வீட்

அதிகரிக்கும் தற்கொலைகள்

அதிகரிக்கும் தற்கொலைகள்

கொரோனா நோய் பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் இதுவரை 5 லட்சம் பேரும் இந்தியாவில் 16ஆயிரம் பேரும் உயிரிழந்திருக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளானவர்கள் பலரும் அச்சத்தில் தற்கொலை செய்து கொள்கின்றனர். சாமானிய மனிதர்கள் மட்டுமல்ல பிரபலமானவர்களும், கோடி கோடியாக பணம் வைத்திருக்கும் அல்வா சக்கரவர்த்தி என்று பெயர் பெற்ற ஹரிசிங்கும் கூட தற்கொலை செய்து கொண்டார் என்பதுதான் சோகம்.

மனதளவில் பாதிப்பு

மனதளவில் பாதிப்பு

பெங்களூருவில் 60 வயது மூதாட்டி ஒருவர் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து கழிவறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னால்தான் தனது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று உறுதியானதாக மனதளவில் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

அதிகரிக்கும் அழுத்தம்

அதிகரிக்கும் அழுத்தம்

கொரோனா பாசிட்டிவ் உறுதியானாலே சிகிச்சைக்காக பலரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதே போல பரிசோதனைக்கு போய் வந்த பலரும் வீட்டிலேயே தனிமையில் இருப்பதும் அவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. அதே போல அக்கம் பக்கத்தினரின் புறக்கணிப்பும் பாதிக்கப்பட்டவர்களின் மன அழுத்தத்திற்கு காரணமாகிறது. இந்த மன அழுத்தமே பலரையும் தற்கொலைக்கு தூண்டுகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

அச்சம் வேண்டாம்

அச்சம் வேண்டாம்

கொரோனா வைரஸ் பற்றிய புரிதலை ஏற்படுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க மதுரையில் மாவட்ட கொரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஐஏஎஸ் தலைமையில் திட்டம் தாயரிக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகள் பயப்படவோ, வேதனைப்படவே தேவையில்லை மன தைரியத்தோடு எதையும் எதிர்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் சந்திரமோகன்.

மனநல ஆலோசனை

மனநல ஆலோசனை

உடல் நல பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்டாலும் பலராலும் மனநல பாதிப்புகளில் இருந்து மீளமுடியாத நிலையிலேயே இருக்கின்றர். எனவே நோய் தாக்கியவர்கள் மனதளவில் மீள வேண்டும் என்பதற்காக மனநல நிபுணர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது நோயின் தன்மை, நோய் பாதிப்பில் இருந்து மீள்வதற்கான மன தைரியத்தையும் மருத்துவர்கள் அளிப்பார்கள் என்றும் சந்திரமோகன் ஐஏஎஸ் கூறியுள்ளார்.

English summary
The COVID-19 wave sweeps strongly across the country, including in Tamil Nadu, mental health experts say the pandemic has triggered panic attacks among those who tested positive for the virus, causing depression and even driving some to the brink of suicide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X