சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உண்மையை திரிக்க வேண்டாம்... பூங்கோதை ஆலடி அருணா தரப்பில் விளக்க அறிக்கை..!

Google Oneindia Tamil News

சென்னை: தனது உடல்நிலை குறித்து உண்மையை திரிக்க வேண்டாம் என திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது;

19.11.2020 காலை ஆலங்குளத்தில் காலை 6 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக மயங்கி விழுந்து - என்னுடைய பணியாளர்கள் உடனடியாக சீபா மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். இரத்த பரிசோதனையில் என் உடலில் இரத்தம் உறையும் தன்மை குறைவாகவும், சர்க்கரை அளவு குறைவாகவும் இருந்தது கண்டறியப்பட்டு - மூளை, நெஞ்சு சி.டி ஸ்கான் எடுக்கப்பட்டு தக்க சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

Explanatory statement on behalf of Pongothai Aladi Aruna

நடந்த இந்த உண்மைச் சம்பவத்தை மறைத்து தவறாக திரித்து நான் ஏதோ தற்கொலை முயற்சி செய்துகொண்டது போல் ஊடகங்கள் பொய்யுரை பரப்புவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

15 ஆண்டுகள் அரசியலில் - முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் என்னை அமைச்சராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது எவ்வாறு தலைவர் கலைஞர் அவர்கள் என்னை தன் மகளைப் போல் பாசத்துடன் நடத்தினாரோ, அதேபோல கழகத் தலைவர் அண்ணனும் என் மீது பாசமாக இருக்கிறார். எனக்குச் சட்டமன்ற உறுப்பினராக, மாநில மருத்துவ அணி தலைவராக பணியாற்ற வாய்ப்பளித்து என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுதலை.. நாளை திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரம்.. திமுக திட்டம்கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலின் விடுதலை.. நாளை திட்டமிட்டபடி தேர்தல் பிரச்சாரம்.. திமுக திட்டம்

இத்தகைய சூழலில் கழகத்திற்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் தவறான செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களை கேட்டுக் கொள்கிறேன்.தற்போது நான் சென்னை அப்போலோ மருத்துவமனையில் எனக்கு ஏற்பட்ட திடீர் மயக்கத்திற்கான மருத்துவ காரணங்களை அறிய அனுமதிக்கப்பட்டு - சிகிச்சை பெற்று வருகிறேன்.

எனக்கு மட்டுமல்ல, என் தந்தைக்கும் எனக்கும் முகவரியும் முன்னேற்றமும் தந்தது இந்த மாபெரும் ஜனநாயக இயக்கமான தி.மு.க. ஆகவே எனக்கு மருத்துவ ரீதியாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு குறித்து தயவுகூர்ந்து இத்தகைய தவறான வதந்திகளைப் பரப்பி - என்னை வளர்த்துள்ள கழகத்திற்கு களங்கம் ஏற்படுத்திட வேண்டாம் என்றும் - என் உடல்நிலை குறித்து விசாரிக்காமல் பத்திரிகைகள், ஊடகங்கள் கற்பனைச் செய்திகளை வெளியிட வேண்டாம் எனப் பணிவுடன் கேட்டு கொள்கின்றேன்.

English summary
Explanatory statement on behalf of Pongothai Aladi Aruna
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X