சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்துக்கு 17 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இலங்கையில் கரையை கடந்து மன்னார் வளைகுடாவில் நிலைகொண்டிருந்து புரேவி புயல். ஆனால் இந்த புயல் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிவிட்டது.

Extremely Heavy Rain warning for 17 Dists in TN

இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று ராமநாதபுரம்- தூத்துக்குடி ஒட்டிய பகுதியில் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் அடுத்த 6 மணிநேரத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதீத கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்: தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம்.

இதனிடையே மயிலாடுதுறை கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 33 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் ராமேஸ்வரத்தில் 20 செ.மீ., கடலூர் மாவட்டல் லால்பேட்டையில் அதிகபட்சமாக 30 செ.மீ. மழையும் பதிவானது. திருத்துறைப்பூண்டியில் திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

English summary
Extremely Heavy Rain warning issued for 17 Dists in Tamilnadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X