சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காந்தி ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்.. கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட்.. திருமாவளவன் பேச்சால் சர்ச்சை

Google Oneindia Tamil News

சென்னை: தேசத்தந்தை மகாத்மா காந்தி ஒரு தீவிர இந்து.. எக்ஸ்ட்ரீமிஸ்.. அவரை படுகொலை செய்த கோட்சே டெர்ரரிஸ்ட் பயங்கரவாதி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

சென்னை அசோக்நகரில் ஈழத் தமிழர் இனப்படுகொலையின் 10-வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் திருமாவளவன் பேசியதாவது:

அணைகளிலுள்ள நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுரைஅணைகளிலுள்ள நீரை குடிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.. தமிழகம் உட்பட 6 மாநிலங்களுக்கு அறிவுரை

நம்பிக்கைகள் அதிகம்

நம்பிக்கைகள் அதிகம்

மகாத்மா காந்தி இந்து மதத்தின் மீது தீவிர நம்பிக்கை கொண்டவர். மூச்சுக்கு 300 முறை ஹேராம் என உச்சரிப்பவர். கர்மவினை, முற்பிறவி ஆகியவை மீது நம்பிக்கை கொண்டவர் காந்தி.

எக்ஸ்ட்ரீமிஸ்ட் காந்தி

எக்ஸ்ட்ரீமிஸ்ட் காந்தி

கர்மவினைகள் மீது நம்பிக்கை கொண்ட யாராக இருந்தாலும் தீவிரவாதிகள்தான். காந்தியைப் பொறுத்தவரையில் அவர் ஒரு எக்ஸ்ட்ரீமிஸ்ட்.. அதாவது இந்து தீவிரவாதி.

டெர்ரரிஸ்ட் கோட்சே

டெர்ரரிஸ்ட் கோட்சே

தீவிரவாதி என்றால் கொள்கையில் தீவிரமாக இருப்பவர் என்று அர்த்தம். அவரை படுகொலை செய்த நாதுராம் கோட்சே ஒரு டெர்ரரிஸ்ட்., பயங்கரவாதி.

கமலை ஆதரித்தது ஏன்?

கமலை ஆதரித்தது ஏன்?

கமல்ஹாசனுக்கும் நமக்கும் ஆயிரம் கருத்து வேறுபாடு இருந்தாலும் சனாதான எதிர்ப்பு அடிப்படையில் அவரது கருத்தை ஆதரித்தேன். கோட்சேவை ஒரு தீவிரவாதி என கமல் சொல்லியிருக்கக் கூடாது; பயங்கரவாதி என குறிப்பிட்டிருக்க வேண்டும். இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

English summary
VCK president Thol. Thirumavalavan said that Gandhiji was Extremist; But Godse was terrorist on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X