சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிக்டாக் ஆப்பிற்கு போட்டி.. மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்..என்ன சிறப்பு!

பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    மாஸாக களமிறங்கும் பேஸ்புக்கின் லாஸ்ஸோ ஆப்.. என்ன சிறப்பு!- வீடியோ

    சென்னை: பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை கொண்டு வர இருக்கிறது.

    பொதுவாக பேஸ்புக் நிறுவனம் இரண்டு விதிகளை நம்பி செயல்பட்டு வருகிறது. தனக்கு போட்டியான நிறுவனங்களை வாங்குவது, இல்லையென்றால் அதைவிட சிறந்த ஆப் ஒன்றை உருவாக்கி போட்டியான நிறுவனத்தை காலி செய்வது.

    அப்படித்தான் வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராமை பேஸ்புக் வாங்கியது. அதே சமயம் வாங்க முடியாத டிண்டருக்கு போட்டியாக டேட்டிங் ஆப் ஒன்றை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது டிக்டாக்கிற்கு எதிராக களமிறங்கி உள்ளது.

    தொடர் புகார் எதிரொலி.. பேஸ்புக்கில் இருந்து 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கம் தொடர் புகார் எதிரொலி.. பேஸ்புக்கில் இருந்து 87 லட்சம் குழந்தை நிர்வாணப் படங்கள் நீக்கம்

    மியூசிக்கலில் ஆப்

    மியூசிக்கலில் ஆப்

    டிக்டாக் ஆப் பற்றி தெரியாதவர்கள் மியூசிக்கலி ஆப் என்றால் கண்டிப்பாக கண்டுபிடித்து விடுவார்கள். மியூசிக்கலி ஆப் சில வாரங்களுக்கு முன் சீனாவை சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் மூலம் வாங்கப்பட்டது. 1 பில்லியன் டாலர் கொடுத்து இந்த ஆப்பை வாங்கி அதற்கு டிக்டாக் என்று பெயர் வைக்கப்பட்டது.

    மிகவும் பிரபலம்

    மிகவும் பிரபலம்

    இந்திய இளைஞர்கள் மத்தியில் சமீபத்திய பீவர் இந்த டிக்டாக் ஆப்தான். பாடுவது, ஆடுவது, சண்டை போடுவது, சமைப்பது, காதலிப்பது என்று அனைத்தையும் இந்த வீடியோ ஆப்பில்தான் செய்கிறார்கள். சமயங்களில் இதில் விரசமான சில வீடியோக்கள் வந்து எரிச்சல் ஊட்டவும் செய்யும். ஆனாலும் இப்போது வளரும் ஆப்களில் நம்பர் 1 இடத்தில் இருப்பது டிக்டாக்தான்.

    பேஸ்புக் கொண்டாட வருகிறது

    பேஸ்புக் கொண்டாட வருகிறது

    முதலில் பேஸ்புக் இந்த டிக்டாக் ஆப்பை வாங்க முயற்சித்தது. இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனம் டிக்டாக் செயலிக்கு போட்டியாக புதிய செயலி ஒன்றை கொண்டு வர இருக்கிறது. லாஸ்ஸோ என்று இந்த ஆப்பிற்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. லாஸ்ஸோ அப்படியே டிக்டாக் போலவே, இன்னும் சில முக்கிய அம்சங்களை கொண்டாட பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

    லிப் சிங்க் சோதனை

    லிப் சிங்க் சோதனை

    அதேபோல் இதில் உள்ள வீடியோக்களை நேரடியாக பேஸ்புக்கில் ஷேர் செய்ய முடியும் (இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பேஸ்புக்கில் ஷேர் செய்வது போல). அதேபோல் பேஸ்புக் இதை நமக்கே தெரியாமல் பேஸ்புக்கில் வைத்து சோதனை செய்து வருகிறது. பேஸ்புக்கில் இப்போது லைவ் வீடியோவில் லிப் சிங்க் என்ற லைவாக பாடும் வசதி சேர்ந்துள்ளது. லாஸ்ஸோவை சோதிக்கவே இதை இதில் இணைத்துள்ளனர்.

    English summary
    Facebook takes against TikTok: The social media giant gonna launch a new app named Lasso.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X