சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா வைரஸ் ஜோக்ஸ்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டால் கைதா? உண்மை என்ன

Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் தொடர்பாக ஜோக்ஸ்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒரு செய்தி பரவலாக பரப்பப்படுகிறது. அப்படி பரப்பப்டும் செய்தி முற்றிலும் உண்மை இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இப்படியாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதாவது கொரோனா வைரஸ் தொடர்பாக ஜோக்ஸ்களை பதிவிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எனவே பேஸ்புக் அட்மினில் உள்ள நிர்வாகிகள் அதை இரண்டு நாளில் மூடிவிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

fact check: govt not passed order to punish those who post jokes on coronavirus

ஏனெனில் அத்தகைய நகைச்சுவை துணுக்குகளை பதிவிட்டதற்காக அட்மின் மற்றும் குழு உறுப்பினர்கள் மீது சட்ட பிரிவு 68, 140 மற்றும் 188 ஐக் கொண்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க முடியும். குரூப்பில் உள்ள யாராவது தவறாக கொரோனா வைரஸில் நகைச்சுவையாக பதிவிட்டாலும் . எல்லோரும் சிக்கலில் இருக்கக்கூடும். எனவே தேவையான நடவடிக்கைகளை எடுக்க குழு நிர்வாகிகள் எச்சரிக்கப்படுகிறார்கள் என்ற ரீதியில் செய்திகள் பரவி வருகிறது.

ஆனால் கொரோனா தொற்றுநோயைப் பற்றி நாம் அனைவரும் உணர வேண்டும். நிலைமையை புரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தின் உண்மை என்னவென்றால், அரசாங்கம் இது போன்ற எந்த உத்தரவையும் வெளியிடவில்லை. இதுபோன்ற எந்த சட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து ஒரு ஆலோசனையும் இல்லை என்று அரசாங்கம் தெளிவாக கூறியுள்ளது,

அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில், போலி செய்திகளை பரப்புவதும், தொற்றுநோய் தொடர்பான பீதியை ஏற்படுத்துவதும் தண்டிக்கப்பட வேண்டியவை என்று கூறியுள்ளது. எனவே இதுபோன்ற போலி செய்திகளை யாரும் பரப்ப வேண்டாம்.

English summary
false: No govrnment order passed to punish those who post jokes on coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X