சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பரிசுப் பெட்டி"க்காக அகமகிழும் அமமுக.. ஆஹா இது "அம்மா"வின் ஆசிர்வாதமேதான்.. விஷயம் இருக்கு!

Google Oneindia Tamil News

Recommended Video

    அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னத்தை ஒதுக்கியது தேர்தல் ஆணையம்

    சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டி வழங்கும் திட்டத்தை கடைசியாக தொடங்கி வைத்தார். அந்த பரிசுப் பெட்டியே தினகரனின் கட்சிக்கு முதல் பொதுசின்னமாக கிடைத்துள்ளது.

    2011ம் ஆண்டு ஆட்சிக்கட்டிலில் ஏறிய அதிமுக மீண்டும் தமிழகத்தில் அமோக வெற்றி பெற்றதுக்கு காரணம் ஜெயலலிதா அறிவித்த மக்கள் நலத்திட்டங்கள் தான்.

    மீண்டும் 2016ம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்த பின்பும் மக்கள் நலத்திட்டங்களை முதல்வராக இருந்த ஜெயலலிதா தொடர்ந்தார். அவர் உயிருடன் இருக்கும் போது கடைசியாக தொடங்கி வைத்த திட்டம் எது தெரியுமா?

    எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுவோம்.. கமல்ஹாசன் பிரச்சாரம்எங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்.. சாதித்துக் காட்டுவோம்.. கமல்ஹாசன் பிரச்சாரம்

    ஜெயலலிதா

    ஜெயலலிதா

    2016ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்ற பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பரிசுப் பெட்டி வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். எனவே அவர் பொதுமக்களுக்கு கடைசியாக வழங்கியது பரிசுப் பெட்டிதான்.

    சட்டப்போராட்டம்

    சட்டப்போராட்டம்

    ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தினகரன், தான் தான் உண்மையான அதிமுக என அதனை கேட்டு போராடினார். ஆனால் தேர்தல் ஆணையமும், நீதிமன்றமும் கைவிரித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தினகரன் தான் ஆர்கே நகரில் போட்டியிட்டு வெற்றி பெற்ற குக்கர் சின்னத்தையாவது கொடுக்கும் படி கேட்டார். ஆனால் அதற்கும் முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்துவிட்டது.

    உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    மக்களவை தேர்தல் வேட்பு மனுதாக்கலுக்கு கடைசி நாள் என்ற நிலையில், சட்டப்போராட்டம் மூலம் தனது அமமுக கட்சிக்கு குக்கருக்கு பதில் பொதுசின்னத்தை தினகரன் பெற்றார். உச்சநீதிமன்றம் உத்தரவை ஏற்று தேர்தல் ஆணையம் தினகரன் அணிக்கு பொதுசின்னம் அளிக்க ஒப்புக்கொண்டது.

    கிப்ட் பாக்ஸ்

    கிப்ட் பாக்ஸ்

    இதையடுத்து தினகரனிடம் 36 சின்னங்களை காண்பித்து இதில் எது வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டது. அதற்கு அவர் பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்வு செய்தார். இதையடுத்து பரிசுப் பெட்டி சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

    ஜெயலலிதா-தினகரன்

    ஜெயலலிதா-தினகரன்

    ஜெயலலிதா கடைசியாக பொதுமக்களுக்கு வழங்கிய நலத்திட்டம் தான் பரிசுப்பெட்டி. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கினார். இப்போது அதுதான் தினகரனின் அரசியல் வாழ்க்கைக்கு ஆரம்பம் ஆகியுள்ளது. பரிசுப்பெட்டியோடு களம் இறங்கும் தினகரன், ஏற்கனவே ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்கே நகரில் சுயேட்சையாக வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Fairytale Unity between jayalalithaa with dhinakaran over gift box symbol
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X