சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பால் விலை குறைப்பு பற்றி.. திட்டமிட்டு பரப்பப்படும் போலி தகவல்கள்.. பால் முகவர்கள் சங்கம் விளக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தவறான தகவல்கள் இணைத்தில் திட்டமிட்டுப் பரப்பப்படுவதாகவும் தமிழக அரசு இது குறித்து உரிய விளக்கத்தை வெளியிட வேண்டும் என்றும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி வலியுறுத்தியுள்ளார்.

Recommended Video

    பால் விலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நல சங்கம்

    தமிழக முதல்வராகப் பதவியேற்றதும், மு க ஸ்டாலின் ஐந்து முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். ஆவின் பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் வரை குறைத்து அவர் பிறப்பித்த உத்தரவு குறித்து இணையத்தில் சில தவறான தகவல்கள் பரவி வருகின்றன.

     fake news is being spread against milk price reduction says Tamil Nadu Dairy Agents Welfare Association chief Ponnusamy

    இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் பொன்னுசாமி கூறுகையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏழைகளுக்கு உதவும் வகையில் ஆவின் பால் விற்பனையைக் குறைத்து உத்தரவிட்டுள்ளார். கடந்த முறை அதிமுக ஆட்சியில் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு நான்கு ரூபாயை உயர்த்திவிட்டு, விற்பனை விலையை லிட்டருக்கு ஆறு ரூபாய் உயர்த்தினர்.

    ஆனால், தற்போது பால் விலை குறைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் அறிவிப்பு வெளியானது முதல் பால் விலை உயர்த்தப்பட்டதைப் போல சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. கடந்த 2019இல் வெளியான அதிமுக அரசு பால் விற்பனை விலையை உயர்த்தி வெளியிட்டிருந்த அரசாணையை மேற்கொள் காட்டி புதிய அரசாணை வெளியிடப்பட்டது.

    இதை வைத்துக்கொண்டு ஏதோ பால் விலை உயர்த்தப்பட்டதைப் போலச் சிலர் வேண்டுமென்ற பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றனர். இந்த பொய் தகவல்களை மக்கல் நம்பக் கூடாது. தமிழக அரசு தற்போது விற்பனையை உயர்த்தவில்லை, குறைக்கவே செய்துள்ளனர். இது குறித்து தமிழக அரசு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும்,

    இந்த விலை குறைப்பு காரணமாக ஆவின் நிறுவனத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பது உன்மைதான். ஆனால், ஆவின் நிறுவனத்தில் நடைபெறும் ஊழலைத் தடுத்தாலேயே இந்த வருமான இழப்பு ஈடுசெய்யப்படும். பழைய ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விரைவாக விசாரணை நடத்தப்பட வேண்டும்" என்றார்.

    English summary
    Tamil Nadu Dairy Agents Welfare Association chief Ponnusamy explanation about milk price reduction
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X