சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகாரிகள் யாரும் கைது இல்லை- நான் மட்டும் ஏன் கைது? ட்விட்டரில் ப.சிதம்பரம் கேள்வி

Google Oneindia Tamil News

Recommended Video

    ப.சிதம்பரத்தை 19ம் தேதிவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு

    சென்னை: தாம் கைது செய்யப்பட்டது தொடர்பாக ட்விட்டரில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

    மும்பையைச் சேர்ந்த ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டை முறைகேடாக பெற உதவினார் என்கிற குற்றச்சாட்டின் கீழ் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு கடந்த 5-ந் தேதி முதல் திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக சிறைக்கு செல்லாமல் இருக்க ப.சிதம்பரம் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை.

    Family tweets for P Chidambaram

    வரும் 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம். திஹார் சிறையில் நூலகத்தை பயன்படுத்தவும் தொலைக்காட்சி பார்க்கவும் சிதம்பரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் ப.சிதம்பரத்தின் ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் தமது சார்பாக குடும்பத்தார் பதிவிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள சிதம்பரம், இந்த ஒப்பந்தம் தொடர்பாக பல்வேறு கட்டங்களில் உங்களுக்கு பரிந்துரைத்த அதிகாரிகள் யாருமே ஏன் கைது செய்யப்படவில்லை.. நீங்கள் மட்டும் ஏன் கைது செய்யப்பட்டிருக்கிறீர்கள்? என மக்கள் என்னிடம் கேட்கின்றனர். கடைசியாக கையெழுத்திட்ட ஒரே காரணத்தால் நீங்கள் கைது செய்யப்பட்டீர்களா? என்றும் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என பதிவிடப்பட்டுள்ளது.

    மேலும் இந்த கேள்விக்கு தம்மிடம் பதில் இல்லை; எந்த ஒரு அதிகாரியுமே தவறும் செய்யவில்லை; அதிகாரிகள் கைது செய்யப்படுவதையும் தாம் விரும்பவில்லை என்றும் சிதம்பரத்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பதிவுக்கு ஆதரவாக, எதிராக ஏராளமான பதில்களும் குவிந்து கொண்டிருக்கின்றன.

    English summary
    Former Union minister P Chidambram said in a tweet, I have requested my family to tweet on my behalf the following: People have asked me If the dozen officers who processed and recommended the case to you have not been arrested, why have you been arrested? Only because you have put the last signature?' I have no answers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X