சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

10 கோடி பேருக்கு அலெர்ட்.. 210 கிமீ வேகத்தில் வீச போகும் ஃபனி புயல்.. வானிலை மையம் எச்சரிக்கை!

ஃபனி புயலின் வேகம் கரையை கடக்கும் போது 210 கிமீ வேகத்தில் இருக்கும்.

Google Oneindia Tamil News

சென்னை: ஃபனி புயலின் வேகம் கரையை கடக்கும் போது 210 கிமீ வேகத்தில் இருக்கும். இந்த புயல் கடக்கும் பாதையில் 10 கோடி பேர் வசித்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஃபனி புயல் நாளை அதிதீவிர புயலாக மாற உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பாதிப்பில்லை. வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு நிலை இரண்டு நாட்களுக்கு முன் புயலாக மாறியது.

இந்த புயலுக்கு ஃபனி புயல் என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இது தமிழகத்தில் கரையை கடக்காது. இது ஒடிசா அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

205 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்... பயம் காட்டுகிறது ஃபானி புயல்205 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும்... பயம் காட்டுகிறது ஃபானி புயல்

வேகம்

வேகம்

இந்த புயல் நொடிக்கு நொடி வலுவடைந்து கொண்டே செல்கிறது. நேற்று 56 கிமீ வேகத்தில் நகர்ந்த இந்த புயல் தற்போது 85 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இந்த புயல் வெள்ளிக்கிழமை கரையை கடக்கும். அப்போது 210 கிமீ வேகத்தில் காற்று வீச கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.

அதிக மழை

அதிக மழை

காற்றின் வேகம் மட்டுமில்லாமல் இந்த புயல் கடுமையான மழையையும் ஏற்படுத்த போகிறது. இந்த புயலால் 150-300 மிமீ அளவிற்கு மழையே பெய்யலாம் என்று கூறப்படுகிறது. முக்கியமாக ஒடிசாவிலும், ஆந்திராவிலும் மிக மிக அதிக அளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புயலுக்கு பின்பு மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாதான்

ஒடிசாதான்

இந்த புயல் ஆந்திர பிரதேசம் முதல் ஒடிசா வரை தாக்கும். அதேபோல் ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகாரில் புயல் மோசமாக தாக்க வாய்ப்புள்ளது. காக்கிநாடா, விசாகப்பட்டினம், வங்கதேசத்தின் எல்லை ஆகிய பகுதிகள் பாதிக்கப்படும். இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட போவது ஒடிசாதான். அங்குதான் புயல் கரையை கடக்க உள்ளது,

எத்தனை பேர்

எத்தனை பேர்

இந்த புயல் செல்லும் பகுதியில் மட்டும் சுமார் 10 கோடி மக்கள் வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த புயலால் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் ஒடிசாவில் இப்போதே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை இந்த புயல் கரையை கடக்கிறது.

English summary
Fani Cyclone Storm will make landfall in Odisha: 10 Cr people have to brace themselves for the attack says Weather Department.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X