சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஃபனி புயல் சென்னைக்கு வராமல் ஏமாற்றிவிட்டதாக சொல்லாதீங்க.. தப்பிச்சுட்டோம்னு சந்தோஷப்படுங்க

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபனி புயல் ஆந்திரா போனதிலும் ஒரு நல்லது இருக்கு

    சென்னை: ஃபனி புயல் நம்மை ஏமாற்றிவிட்டு, ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக யாரும் எண்ண வேண்டாம் மக்களே, ஏனெனில் அந்த புயல் வலுப்பெற்று அதி தீவிர புயலாக மாறவுள்ளது. இது மட்டும் நம்மைத் தாக்கினால் மிகப் பெரிய சேதத்தைத்தான் நாம் சந்தித்திருக்க வேண்டும்.

    195 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதால், பெரும் புயல் பாதிப்பில் இருந்து வடதமிழகம் தப்பித்துவிட்டதாக ஆறுதல் அடையலாம்.

    ஆஹா அருமையான மழை வரப்போகுது, மழையை ரசிக்கலாம், வெயிலுக்கு இதமாக இருக்கும் என்று ஒருபுறம் மக்கள் சந்தோஷப்பட்டனர். மறுபக்கம் அதிகனமழை பெய்யும், தமிழத்துக்கு ரெட் அலாரட், மிகத்தீவிரமான புயல் வீசும் என பீதியும் வானிலை தகவல்களால் மக்களிடையே ஏற்பட்டது.

    கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!கடல்லயே இல்லையாம்.. மெரினா பீச் சென்ற பொது மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

    ஃபனி புயல் மையம்

    ஃபனி புயல் மையம்

    ஆனால் தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது, தற்போது புயலாக உருமாறியது. இந்த புயல் நேற்றைய நிலவரப்படி சென்னையில் இருந்து 910 கிலோமீட்டர் தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 630 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.

    ஃபனி புயல் உக்கிரம்

    ஃபனி புயல் உக்கிரம்

    இந்த ஃபனி புயல் வடமேற்காக நகர்ந்து மே 1ம் தேதி மாலையில் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதியில் கரையை கடக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த புயல் கரையை கடக்கும் கடைசி 12 மணி நேரத்தில் 160 முதல் 190 கிலோமீட்டர் என்ற அளவுக்கு அதிதீவிரமாக காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    புயலின் அபாயம்

    புயலின் அபாயம்

    குறிப்பாக இந்த ஃபனி புயலின் தீவிரம் மே1ம் தேதி முதல், மே 2ம் தேதி மாலை வரை மிகத்தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே ஃபனி புயல் தமிழகத்தை நோக்கி நகராமல் ஆந்திரா, ஒடிசாவை நோக்கி கடந்து செல்வதால் தமிழகம் புயலின் கோர பாதிப்பில் இருந்து தப்பியிருக்கிறது என்று சொல்லலாம்.

    சந்தோஷப்படுங்கள்

    சந்தோஷப்படுங்கள்

    எனவே ஃபனி புயல் தமிழகத்தில் கரையை கடக்கவில்லை. இந்த புயல் தமிழகத்தை ஏமாற்றிவிட்டதாக யாரும் எண்ணாதீர்கள். இந்த புயல் பாதிப்பில் இருந்து நாம்தப்பித்து விட்டோம் என்று சந்தோஷப்படுங்கள். ஃபனி புயல் காரணமாக வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே வட தமிழகம் ஓரளவுக்கு மழை பெற வாய்ப்புள்ளதை நினைத்து ஆறுதல் அடைவோம்.

    English summary
    Fani cyclone: tamil nadu to escape storm but andhara likely hit by fani storm
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X