சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ரஜினியே கைகாட்டியிருந்தாலும் தலைவர் இடத்தில் அர்ஜுன மூர்த்தியை ஏற்க மாட்டோம்.. ரசிகர்கள் கொதிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: ரஜினியே கைகாட்டியிருந்தாலும் தலைவர் இடத்தில் அவரை வைத்து பார்க்க மாட்டோம் என ரஜினி ரசிகை ஒருவர் கூறிய கருத்துகள் வைரலாகி வருகிறது.

Recommended Video

    ரஜினியே கைகாட்டியிருந்தாலும் அர்ஜுன மூர்த்தியை ஏற்க மாட்டோம்.. கொந்தளித்த ரசிகை - வீடியோ

    ரஜினிகாந்தை கடந்த 25 ஆண்டுகளாக விடாமல் அரசியலுக்கு வருமாறு ரசிகர்கள் அழைத்து வந்தனர். கடந்த 2017ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி 3 ஆண்டுகளாக எந்த நகர்வையும் செய்யவில்லை.

    இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசியலுககு நிச்சயம் வருவேன் என கூறியிருந்த அவர் தனது கட்சிக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியையும் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனையும் நியமித்தார்.

    அரசியலுக்கு வரவில்லை

    அரசியலுக்கு வரவில்லை

    பின்னர் கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் ஆதேதி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தன்னால் அரசியலுக்கு வர இயலாது என அறிவித்துவிட்டார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். போராட்டம் நடத்தி பார்த்தனர். அப்போதும் தனது முடிவில் ரஜினி ஸ்டிராங்காக இருக்கிறார் என்பதை மீண்டும் ஒரு அறிக்கை மூலம் அறிவித்துவிட்டார்.

    அர்ஜுன மூர்த்தி

    அர்ஜுன மூர்த்தி

    இந்த நிலையில் ரஜினியால் தொடங்கப்படாத கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி தான் ஒரு அரசியல் கட்சியை தொடங்கப் போவதாகவும் எனது கட்சியின் கொள்கைகளும் கோட்பாடுகளும் பாஜகவுக்கு மாற்றாக இருக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் அதில் சேர்ந்து தம்மை ஆதரிக்குமாறு அர்ஜுனமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார்.

    எதிர்ப்பு

    எதிர்ப்பு

    இதனால் ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். ரஜினி இல்லை என்றால் எந்த கட்சிக்கும் செல்ல மாட்டேன் என கூறியவர் தற்போது புதிய கட்சியை ஆரம்பிக்க போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு ரசிகர்களின் எதிர்ப்பு வைரலாகி வருகிறது.

    பெண் ரசிகர்

    பெண் ரசிகர்

    நாமக்கல்லை சேர்ந்த ரதி என்பவர் கூறுகையில் அர்ஜுன மூர்த்தி தனியாக கட்சி தொடங்க போவதாக அவர் பேட்டி அளித்துள்ளார். அர்ஜுன மூர்த்தி யாரு, அவரை எங்களுக்கு எப்படி தெரியும். தலைவர் என்ற ஒரு பெரிய கட்டமைப்பு அவரை கை நீட்டி காண்பித்ததால்தான் இவர்தான் அர்ஜுன மூர்த்தி என எங்களுக்கு தெரியும்.

    தனி கட்சி

    தனி கட்சி

    தலைவர் அரசியலுக்கு வரவில்லை என கூறிவிட்டார். அர்ஜுன மூர்த்தி தனி கட்சி தொடங்குவது அவரது தனிப்பட்ட கருத்து. இரு திராவிட கட்சிகளை எதிர்த்து அவர் தனிக்கட்சியை தொடங்குகிறார் என்றால் அது பெரிய திறமைதான். ரசிகராக நாங்கள் பார்க்கும்போது ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என தலைவர் ரஜினியைதான் நாங்கள் பார்த்தோம். தலைவர் இடத்தில் வேறு யாரையும் வைத்து பார்க்க மாட்டோம்.

    தலைவர் தலைவர்தான்

    தலைவர் தலைவர்தான்

    50 ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி நடத்தும் திராவிட கட்சிகளிலேயே நாங்கள் இணையவில்லை. புதுசா வர இவர் கட்சியில்தானா இணைய போகிறோம்? தலைவர் தலைவர்தான். அர்ஜுன மூர்த்தி அரசியல் கட்சியை தொடங்கி மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் நாட்டுக்கு நல்லது செய்தால் அதை வரவேற்கிறோம். ஆனால் அந்த இடத்திற்கு தலைவரை தவிர வேறு யாரையும் வைத்து பார்க்க விருப்பம் இல்லை என தெரிவித்துள்ளார்.

    English summary
    Rajinikanth fans saying they wont accept anyone as leader except Thalaivar.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X