• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கிறங்க வைக்கும் ஷிவானி.. மிரள வைக்கும் ரம்யா.. ஆனாலும்.. புலம்ப தொடங்கும் ரசிகர்கள்

|

சென்னை: "செம பீஸ்கள் வீட்டிற்குள் இத்தனை பேர் இருந்தும், இந்த சீசன் இப்படி எரிச்சலை கிளப்புதே.. கன்டன்ட்டுக்கு இப்பவே பஞ்சம் வந்துடுச்சே? இன்னைக்கு மட்டும் அந்த குறும்படம் போடலேன்னா.." என்று வெறுத்து கமெண்ட்களை போட தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
நாளுக்கு நாள் விறுவிறுப்பு கூடும் என்றால், அதுக்கு நேர்மாறாகவே இருந்து வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி.. கொடுக்கப்படும் டாஸ்க்கும் அதற்கு மேல் அறுவையாக இருக்கிறது.

முந்தைய சீசன்களில் ஒன்று டாஸ்க்குகள் இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்கும்.. அல்லது போட்டியாளர்கள் அதை சுவாரஸ்யமாக மாற்றிவிடுவார்கள்.

சாமானியர்களை வச்சு பிக் பாஸ் நடத்தலாமே.. மக்களுக்கு கத்துக்க நிறைய கிடைக்குமே! சாமானியர்களை வச்சு பிக் பாஸ் நடத்தலாமே.. மக்களுக்கு கத்துக்க நிறைய கிடைக்குமே!

 போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

இப்போது இது இரண்டுமே இல்லை.. மேலும் ஒட்டுமொத்த போட்டியாளர்களே இயல்பாக இல்லாதது போல, எப்போதுமே கேமிரா உணர்வுடனேயே சுற்றி திரிவது போலவே தென்படுகிறது.. இதுதான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் விறுவிறுப்புதன்மை குறைய முதல் காரணமாக இருக்கும்.

 விளம்பர பொருட்கள்

விளம்பர பொருட்கள்

ஆனால், எப்படி இருந்தாலும், விளம்பர பொருட்களை பிக் பாஸ் வீட்டுக்குள் கொண்டு வந்துவிடுவது மட்டும் தவறாமல் நடக்கிறது.. அந்த விளம்பர பொருளை விளம்பரப்படுத்த இவர்கள் திணறி விடுகின்றனரை.. இதற்கு முன்பும் பல விளம்பர நிகழ்ச்சி நடந்துள்ளது.. அதையும் பல போட்டியாளர்கள் வெரைட்டியாக தர முயன்றிருக்கிறார்கள்.. ஆனால், நேற்று விளம்பர நிகழ்ச்சி படுஇழுவையாக இருந்தது.

 ஷிவானி

ஷிவானி

கேபி, ஆஜித், ஷிவானி போன்ற பிஞ்சுகளை போட்டியாளர்களாக உள்ளே எடுத்து வைத்து கொண்டு, விளம்பர பொருட்களுக்கு பேச சொன்னால் என்ன பேசுவார்கள்? அவர்களுக்கு ஏற்றபடி ஜாலியான டாஸ்க், அல்லது சீனியர்களுக்கு ஏற்றபடி கஷ்டமான டாஸ்க் தந்தால்தான் சரிவரும். ஒரு ரோபோ போல அந்த விளம்பர பொருட்களை பற்றி அவர்கள் விவரித்து சொல்வதை பார்க்கும்போது, நாமும் ஒரு ரோபோ போலவே நிகழ்ச்சியை பார்க்க வேண்டியதாக இருக்கிறது. இதனால் ரசிகர்கள் ரொம்பவே நொந்து போய்விட்டனர்.

புலம்பல்

புலம்பல்

"ஷிவானி, ரம்யா பாண்டியன், என்று மாஸ் பீஸ்கள் உள்ளே இருக்கிறார்கள்.. கவர்ச்சியான டிரஸ்கள் அணிகிறார்கள்.. பார்க்க க்யூட்டாக, அழகாக இருக்கிறார்கள்.. ஆனால் வெற்றி பெற இது மட்டுமே போதுமா? இந்த புரோக்கிராம் பொறுத்தவரை கன்டன்ட் தருபவர்கள்தான் அந்த வீட்டில் இருக்க முடியும்.. அப்படி இவர்கள் எதுவுமே தராமல் சிரித்தபடியே பொழுதை கழிப்பதுபோல தெரிகிறது.

 கமல் சார்

கமல் சார்

அவர்களுக்காகத்தான் இந்த புரோக்கிராமே பார்க்கிறோம்.. இருந்தும், ஏதோ குறையாகவே இருக்கிறது.. இன்னைக்கு சனிக்கிழமை.. கமல் சார் பர்த்டே.. இந்த வாரம் எந்த கன்ட்ன்ட்டும் இல்லை.. அதனால், கமல் வந்துதான், மிச்சமிருக்கிற 2 நாளை விறுவிறுப்பாக்கணும்.. அர்ச்சனாகூட ஷனம் சண்டை போட்டப்பே, குறும்படம் கேட்பேன்னு சபதம் போட்டாங்களே, அது மாதிரி இன்னைக்கு ஏதாவது தேத்தி ஷோ நடத்தினால்தான் கண்டன்ட் கிடைக்கும் போல" என்று ரசிகர்கள் புலம்ப தொடங்கிவிட்டார்கள்.

English summary
Fans feel that Bigg boss season 4 is becoming bore: Bigg Boss 4
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X