சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தீப்தி ஷர்மாவின் ஒற்றை சம்பவம்.. தூக்கத்தை இழந்த இங்கிலாந்து.. இந்திய ரசிகர்களின் தெறிக்கும் மீம்ஸ்!

Google Oneindia Tamil News

சென்னை: இங்கிலாந்து அணிக்கு எதிராக தீப்தி ஷர்மா செய்த ரன் அவுட் (மன்கட்) செய்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தீப்தி ஷர்மாவிற்கு ஆதரவாக இந்திய ரசிகர்கள் மீம்ஸ் வெளியிட்டு பதிலடி கொடுத்து வருகின்றனர். அதில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

சர்வதேச கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஷர்மா செய்த ஒற்றை சம்பவம் சர்வதேச ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று இரவு நடைபெற்றது.

இந்திய ஜாம்பவான் ஜுலன் கோஸ்வாமியின் கடைசி ஆட்டம் என்பதால், இந்திய ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்று நோக்கத்தோடு இந்திய வீராங்கனைகள் களமிறங்கினர். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தீப்தி ஷர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனாவின் அபார ஆட்டத்தால் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

இங்கிலாந்து அணியை கண்ணீர்விட வைத்த இங்கிலாந்து அணியை கண்ணீர்விட வைத்த "தீப்தி சர்மா".. பிளான் போட்டு தந்த மாஸ்டர்மைண்ட்? கவனிச்சீங்களா!

திணறிய இங்கிலாந்து

திணறிய இங்கிலாந்து

தொடர்ந்து 170 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இந்திய வீராங்கனைகள் கடுமையாக சவால் அளித்தனர். ரேணுகா சிங் மற்றும் ஜுலன் கோஸ்வாமியின் அபார பந்துவீச்சால் 118 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி திணறியது.

தீப்தி ஷர்மா சம்பவம்

தீப்தி ஷர்மா சம்பவம்

ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டீன் - டேவிஸ் இணை, எச்சரிக்கையுடன் விளையாடியது. இதனால் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு 39 பந்துகளில் 17 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. அப்போது பந்துவீசிய தீப்தி ஷர்மா, மறுமுனையில் இருந்த சார்லெட் டீனை ரன் அவுட் (மன்கட்) செய்து விக்கெட் வீழ்த்தினார். இதனால் இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

இங்கிலாந்து ரசிகர்கள்

இங்கிலாந்து ரசிகர்கள்

இதனைத்தொடர்ந்து மிகச்சிறந்த போராட்டமாக சென்ற போட்டியை இந்திய வீராங்கனை மன்கட் செய்து சீரழித்துவிட்டார் என்று சமூக வலைதளங்களில் புலம்ப தொடங்கினர். இதற்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய ரசிகர்கள், மீம்களை வெளியிட்டு இங்கிலாந்து ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்திய ரசிகர்கள் பதிலடி

இந்திய ரசிகர்கள் பதிலடி

குறிப்பாக 2019 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பென் ஸ்டோக்ஸ் செய்த சம்பவத்தை குறிப்பிட்டு, ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்டை மீறியது இங்கிலாந்து அணி தான் என்றும், கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்துவிட்டு, அதன் விதிமுறைகளை மறந்து இங்கிலாந்து மட்டும்தான் என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மீம்ஸ்

மீம்ஸ்

அதேபோல் லகான் படத்தில் செய்யப்படும் மன்கட் காட்சியையும், ஐபிஎல் தொடரில் பட்லரை மன்கட் செய்த அஷ்வினின் புகைப்படத்தையும் சேர்த்து தீப்தி ஷர்மா செய்த ரன் அவுட்டை ரசிகர்கள் நியாயம் செய்து வருகின்றனர். இன்னும் சிலரோ, கிரிக்கெட்டின் விதிகள் மாற்றப்பட்டதால் இது மன்கட் அல்ல, ரன் அவுட் தான் என்று கிரிக்கெட்டின் விதிகளை கொண்டு மீம்களை வெளியிட்டு வருகின்றனர். அதேபோல் ஜுலன் கோஸ்வாமியின் கடைசி போட்டியில் தீப்தி ஷர்மா ஹீரோவானதாக மீம்ஸ் வருகின்றன.

அஸ்வின் பதில்

அஸ்வின் பதில்

தீப்தி ஷர்மாவின் செயல் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் வீரர் அஷ்வின், இங்கிலாந்து வீரர் பிராட், சாம் பில்லிங்ஸ், வர்ணனையாளர் ஹர்ஷா போக்ளே என பல்வேறு தரப்பினரும் விவாதித்து வருகின்றனர். ஆனால் ஸ்பிரிட் ஆக் தி கேம் என்பது விதிகளுக்கு உட்பட்டு விளையாடுவது தான் என்பதை தீப்தி ஷர்மாவின் செயல் மீண்டும் அழுத்தமாக சொல்லியுள்ளது.

ஸ்பிரிட் ஆஃப் தி கேம்

ஸ்பிரிட் ஆஃப் தி கேம்

விதிகளை பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்வதும், விதிகளை பின்பற்ற முடியாமல் ஸ்பிரிட் ஆஃப் தி கேம் என்று பேசுவதும் சரியில்லை என்பது சர்வதேச அரங்குக்கு இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி ஷர்மா அடித்து கூறியுள்ளார் என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
Deepti Sharma's run out (mankad) against the England team has created a debate. Indian fans are retaliating by publishing memes in support of Deepti Sharma in this incident. Here are some of them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X