சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அரசு பேருந்துகள் இயக்கம்.. எம்.ஆர்.விஜயபாஸ்கர் இன்று வெளியிட்ட 2 நல்ல அறிவிப்புகள்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட எல்லையில் உள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது என்றும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

கொரோனாவை தடுக்க மார்ச் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பல்வேறு தளர்வுகளுடன் 8-வது முறையாக ஊரடங்கு உத்தரவு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பயன்பாட்டிற்காக தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இன்று முதல் அனைத்து மாவட்டத்திலும் மாவட்ட எல்லைகளுக்குள் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

நீட் பலிபீடம்.. நீட் கூட்டுத்துரோகம்.. அனிதாவுக்காக டுவிட்டரில் கொதித்த.. ஸ்டாலின்.. உதயநிதிநீட் பலிபீடம்.. நீட் கூட்டுத்துரோகம்.. அனிதாவுக்காக டுவிட்டரில் கொதித்த.. ஸ்டாலின்.. உதயநிதி

சென்னையில் பேருந்துகள்

சென்னையில் பேருந்துகள்

சென்னையில் 161 நாட்களுக்கு பின் பஸ்கள் மீண்டும் இயங்க தொடங்கியதால் சென்னைவாசிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் பிற மாவட்ட மக்கள் பேருந்து போக்குவரத்து இயக்கத்திற்கு வரவேற்பு தெரிவித்தாலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகள் இயக்கப்படாததால் வேதனை அடைந்துள்ளனர்.

நல்ல அறிவிப்புகள்

நல்ல அறிவிப்புகள்

இதற்கிடையே போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், அரசு பேருந்துகள் பக்கத்து மாவட்டத்திற்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக மாவட்ட எல்லையிலுள்ள பேருந்து நிறுத்தம் வரை பேருந்துகள் இயக்கப்படும். அனைத்து பேருந்துகளும் இரவு 9 மணி வரை இயக்கப்படும்.

பேருந்து கட்டணம் உயராது

பேருந்து கட்டணம் உயராது

பேருந்து நிலையங்களில் பயணிகளின் எண்ணிக்கைக்கேற்ப அரசு பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அறிகுறி இருந்தால் மட்டுமே ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படாது. அரசு பேருந்துகளில் பயணிக்க பொதுமக்கள் மார்ச் மாதத்தில் வாங்கிய பழைய மாதாந்திர பாஸ் செப்டம்பர் 15ந்தேதி வரை செல்லும்" இவ்வாறு கூறினார்.

பேருந்துகள் இயக்கம்

பேருந்துகள் இயக்கம்

தமிழக அரசு மாவட்ட எல்லை வரை பேருந்துகளை இயக்குவதற்கு பக்கத்து மாவட்டத்திற்கும் பேருந்துகளை இயக்கலாமே என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாவட்ட எல்லையில் இருந்து இறங்கி வேறு மாவட்டத்திற்கு செல்வது வயதானவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சிரமம் என்று வேதனை தெரிவித்தனர். அத்துடன் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல பேருந்துகளை இயக்கினால் தான் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக இருக்கும் என்றும் தெரிவித்தனர்.

English summary
Transport Minister MR Vijayabaskar has said that buses will be operated up to the bus stand at the district border across Tamil Nadu and the fare of government buses will not be increased.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X