சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விவசாய கடன் தள்ளுபடி செய்யாவிட்டால் மறியல் போராட்டம்: அய்யாக்கண்ணு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டும் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு எச்சரித்துள்ளார்.

மணப்பாறை அருகே பூலாம்பட்டியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றன்னர்.

Farmer urge to Govt on loan waiver issue

இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை வையம்பட்டி வழியாக கொண்டுவர கோரியும், வெள்ளம் வரும் காலங்களில் பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு டேம், கண்ணூத்து டேம்களை நிரப்பக்கோரியும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யவேண்டும். வங்கிகளில் உள்ள விவசாயிகளின் அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக் கூட்டத்தில் விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், கடுமையான வறட்சியை தமிழகம் கண்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உரிய நடவடிக்கை எடுத்து விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும். இல்லையென்றால் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்தப்படும்.

எப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடிஎப்படிங்க தப்பா பேசலாம்.. என் புருஷன் மீடியாவுல வந்து மன்னிப்பு கேட்கணும்.. டிக்டாக் வினிதா அதிரடி

வைகை, குண்டாறுகளை இணைத்து பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு, கண்ணூத்து போன்ற டேம்கள் மூலமாக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்றார்.

English summary
Tamilnadu Farmer leader Ayyakannu has urged that the Tamilnadu govt should take action on the loan waiver issue.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X