சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சர்க்கரை ஆலை உரிமையாளர் வீட்டில் பிச்சை எடுத்து போராடிய விவசாயிகள் கைது.. அய்யாக்கண்ணு பகீர் புகார்

Google Oneindia Tamil News

சென்னை: கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வலியுறுத்தி சென்னை கோட்டூரில் உள்ள அரூரான், மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகளின் உரிமையாளரின் வீட்டின் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நான்கு இடங்களில் அரூவா மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலைகள் உள்ளன. அந்த ஆலைகளின் உரிமையாளர் ராம் தியாகராஜனின் வீடு சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கிறது.

farmers protest in sugar cane mill owner house in chennai

கரும்பு நிலுவை தொகையை வழங்காததை கண்டித்து இன்று அவரது வீட்டின் முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் கூடினர். திடீரென அங்கு விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்தண்டவாளத்தில் சென்ற 3 பெண்கள்.. கன நொடியில் தள்ளிவிட்டு உயிரை கொடுத்து காப்பாற்றிய கான்ஸ்டபிள்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அய்யாக்கண்ணு, "கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி முதல், 26 மாதங்களில் 10 ஆயிரம் விவசாயிகள், 14லட்சம் டன் கரும்பை, சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கி உள்ளனர். அந்த வகையில் 420 கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வர வேண்டி உள்ளது. கட்டிங் ஆர்டரை பெறும் போது விவசாயிகளிடம் பெற்ற கையெழுத்தை பயன்படுத்தி, 5830 விவசாயிகள் பெயரில், 200கோடி அளவுக்கு கடன் வாங்கி பெறப்பட்டுள்ளது" என்றார்

இந்நிலையில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கலைந்து செல்ல மறுத்தால் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று போலீசார் கைது செய்ததால் கோட்டூர்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

English summary
farmers protest in sugar cane mill owner house in chennai over Sugarcane arrears
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X