சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சூப்பர்.. ஒரே நாளில் 2 முக்கிய அதிரடிகள்.. தெறிக்க விட்ட எடப்பாடியார்.. என்ன காரணம்!

ஒரே நாளில் எடப்பாடியாருக்கு ஆதரவு பெருகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கண்ணெதிரிலேயே எடப்பாடியாருக்கு மக்களின் ஆதரவு கூடிவருவதாக கூறப்படுகிறது.. இதற்கு காரணம் முதல்வரின் அந்த 2 விஷயங்கள்தான்!

இதோ வீட்டுக்கு அனுப்பிவிடுவோம், இன்னும் 6 மாசம்தான், அதிமுக அரசை வீழ்த்திவிடும் என்று எதிர்க்கட்சிகள் சவால் விடுத்து கொண்டே இருந்த நிலையில், அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டு சென்று கொண்டே இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி!

இதற்கு 2 விஷயங்கள்தான் காரணமாக அமைந்துள்ளன.. ஒன்று, அவரது சிம்பிளிசிட்டி.. மற்றொன்று கொரோனாவை எதிர்கொள்ளும் அவரது அணுகுமுறை!

மு.க.ஸ்டாலின் ஏன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னார்.. ஜெயக்குமார் சொல்வது போல வெறும் மு.க.ஸ்டாலின் ஏன் அப்படி ஒரு வார்த்தையை சொன்னார்.. ஜெயக்குமார் சொல்வது போல வெறும் "நாடகமா"?

நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் ஐடிசி நிறுவன விழா, ஜல்லிக்கட்டு காளை சிலை திறப்பு விழா, கொரோனா நோய் தடுப்பு பணிகள் பற்றிய ஆய்வுக் கூட்டம், வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.. இவைகளில் முதல்வர் கலந்து கொண்டார்.

கண்மாய்

கண்மாய்

அதேபோல, தமிழகத்தில் உள்ள ஏரிகளிலேயே பெரிய ஏரி என்ற பெருமைக்குரிய இந்த கவிநாடு கண்மாய் ஏரி தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.69 லட்சத்தில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது... இந்த ஏரியை பார்வையிடுவதற்காக முதல்வர் வந்தபோது, அந்த பகுதி விவசாயிகள் 300 மாட்டு வண்டிகளில் வந்து முதல்வரை வரவேற்க தயாராக நின்று கொண்டனர்.

மாஸ்க்

மாஸ்க்


மாட்டு வண்டிகளில் உட்கார்ந்திருந்த விவசாயிகள் எல்லாருமே கழுத்தில் பச்சை துண்டு அணிந்து இருந்தனர்... அப்போது முதல்வரும் கழுத்தில் பச்சை துண்டு அணிந்திருந்தார்.. முதல்வரின் கழுத்தில் பச்சை துண்டு இருந்ததை பார்த்ததுமே விவசாயிகள் புளகாங்கிதம் அடைந்தனர்.. அவர் அதேபோல அவர்களின் மகிழ்ச்சியை பார்த்த முதல்வரும், விவசாயிகளுடன் தானும் ஒரு விவசாயியாக நடந்தே அவர்களுடன் சென்றார்.

விஜய்பாஸ்கர்

விஜய்பாஸ்கர்

இதை பார்த்ததும் கைகளை தட்டி விவசாயிகள் ஆரவாரம் செய்தனர்.. ஒருகட்டத்தில் முதல்வரை, தாங்கள் மாட்டு வண்டியில் ஏறி உட்கார வேண்டும் என்று விவசாயிகள் ஆசைப்பட்டனர்.. அவர்கள் அப்படி சொன்னதுமே, உடனே முதல்வரும் மாணட்டு வண்டியில் ஏறி கொண்டார்.. முதல்வர் ஏறியதும் பின்னாடியே விஜயபாஸ்கரும் ஏறி மாட்டு வண்டியில் நின்று கொண்டார்... இப்படி ஒரே நாளில் விவசாயிகளை அசர வைத்தார் முதல்வர்!

தடுப்பூசி

தடுப்பூசி

இதற்கு பிறகு கூட்டத்தில் பேசும்போது, கொரோனா வைரஸ் நோய் குணமடைய தடுப்பூசி கண்டுபிடித்தவுடன் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் அரசாங்க செலவில் புதிய தடுப்பூசி போடப்படும் என்று அறிவித்தார்.. முதல்வரின் இந்த அறிவிப்பு கேட்டு கூடியிருந்த மக்கள் அனைவரும் கரகோஷம் எழுப்பினர்.. இந்த விஷயங்கள்தான் நேற்றில் இருந்து எடப்பாடியாரை புகழ காரணமாக இருந்து வருகிறது.

திமுக

திமுக

இதை பற்றி சில அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, "இந்த விஷயத்தை திமுக வேறு மாதிரியாக அணுகுகிறது.. தடுப்பூசி என்பது மக்களுக்கு அரசு இலவசமாக தர வேண்டிய ஒன்றுதானே.. அதை எதற்கு தேர்தல் வாக்குறுதி போல சொல்ல வேண்டும்? இது அரசின் கடமை என்று திமுக அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறது. பீகார் மாநில பாஜக, ஒருபடி மேலே தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துவிட்டது.. அதற்கே அதிருப்தி கிளம்பி உள்ளது. இதை பற்றி சில அரசியல் நோக்கர்களிடம் கேட்டபோது, "இந்த விஷயத்தை திமுக வேறு மாதிரியாக அணுகுகிறது.. தடுப்பூசி என்பது மக்களுக்கு அரசு இலவசமாக தர வேண்டிய ஒன்றுதானே.. அதை எதற்கு தேர்தல் வாக்குறுதி போல சொல்ல வேண்டும்? இது அரசின் கடமை என்று திமுக அறிக்கை வாயிலாக தெரிவித்து வருகிறது. பீகார் மாநில பாஜக, ஒருபடி மேலே தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துவிட்டது.. அதற்கே அதிருப்தி கிளம்பி உள்ளது.

முதல்வர்

முதல்வர்

அதனால் நம் மாநிலத்திலும் இப்படி ஒரு அறிவிப்பை முதல்வர் அறிவித்தது சாதாரண ஒன்றுதான். அதேபோல, விவசாயிகளின் முதல்வர் என்றுதான் ஆரம்பத்தில் இருந்து அவரை அழைத்து வருகிறார்கள் விவசாயிகள்.. நேற்று போலவே பலமுறை விவசாயிகளை சந்தித்து, அவர்களின் குறை கேட்டறிந்தவர்.. வயலில் இறங்கி அவர்களுடன் சகஜமாக பேசியவர்.

வாழ்வாதாரம்

வாழ்வாதாரம்

அந்த வகையில் மாட்டு வண்டியில் போனதும், விவசாயிகளிடம் பேசியதும் வழக்கமான ஒன்றுதான்.. இதையே ஸ்டாலின் செய்திருந்தால் விமர்சித்திருப்பார்கள்.. இந்த 6 மாசமாக வேலையிழந்து தவித்து வரும் சாமான்ய மக்களுக்கு ஏதாவது பொருளாதார ரீதியாக, அல்லது வாழ்க்கை தரம் உயர வழிவகை மட்டும் செய்தாலே போதும், முதல்வருக்கு இன்னும் மவுசு கூடிவிடும்" என்றனர்.

English summary
Farmers' support for Ramu has increased
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X