சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு.. Fast tag வாங்கிவிடுங்க.. இல்லைன்னா வண்டி நகராது பாஸ்

Google Oneindia Tamil News

சென்னை: 2021ம் ஆண்டு, ஜனவரி 1ம் தேதி முதல் 3 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு, பாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து அமைச்சகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே பாஸ்டேக் வாங்குவதற்கு வாகன உரிமையாளர்கள் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இப்போது பணம் செலுத்துவது மற்றும் பாஸ்டாக் என்று இரு வழிகள் உள்ளன. இதில், படிப்படியாக பணம் கொடுத்து அனுமதி பெறுவது குறைக்கப்பட்டு விட்டது. ஒரே ஒரு வழி பாதை மட்டுமே அனைத்து டோல்கேட்களிலும் வைக்கப்பட்டுள்ளது.

 Fast tag is must for all vehicles from 2021, January 1

எனவே, பணம் கொடுத்து சுங்க கட்டணம் செலுத்துவோர் அந்த ஒரே பாதையை பயன்படுத்த வேண்டி இருப்பதால் நீண்ட தூரத்தில் வாகனங்கள் காத்திருக்கின்றன. ஆனால் அருகேயே, மூன்று அல்லது நான்கு வழிப்பாதைகள், பாஸ்டேக் மூலமாக மட்டும் கடந்து செல்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன. ஸ்கேன் செய்து வாகனங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. எனவே அங்கு, வாகனங்கள் வேகமாக கிளம்பி சென்று விட முடிகிறது.

வாகனத்தை நிறுத்தாமல், முதல் கியரில் வாகனத்தைச் செலுத்தி கொண்டு வாகனங்கள் கடந்து செல்லும் அளவுக்கு பாஸ்டேக் வழித்தடங்கள் எளிமையாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், 2021 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் சுங்கச்சாவடிகளில் பணபரிவர்த்தனை கிடையாது. அனைத்து வாகன உபயோகிப்பாளர்களும், பாஸ்டேக் மூலம் மட்டுமே, கட்டணங்களை செலுத்த வேண்டும் என்று அறிவிப்பு பலகைகள் டோல்கேட்டில் வைக்கப்பட்டுள்ளன.

வாகன விற்பனை மையங்கள் அல்லது சுங்கச் சாவடி அருகே உள்ள மையங்களில், பாஸ்டேக் வாங்கிக்கொள்ளலாம்.

பல்வேறு வங்கிகளும் இந்த சேவையை வழங்குகின்றன. நீங்கள் எந்த வங்கி சேவையை பயன்படுத்தினாலும் பரவாயில்லை, அந்த அந்த வங்கிகளில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்க வேண்டுமென்று தேவை கிடையாது. எனவே வாகன உரிமையாளர்கள் அல்லது வாகன ஓட்டிகள் விரைவாக பாஸ்டேக் வாங்குவது உங்கள் பயணத்தை இனிமையாக்கும் என்று சொல்லலாம்.

English summary
Fast tag is must for all vehicles from January 1, 2021, says government, the vehicle owners are very eager to buy fast tag.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X