சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும்.. சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு மட்டும் செல்லாது

Google Oneindia Tamil News

சென்னை: நாடு முழுவதும் ஃபாஸ்டேக் செல்லும் என்றாலும் சென்னையில் உள்ள சுங்கச்சவாடிகளுக்கு இந்த ஃபாஸ்டேக் செல்லாது என தமிழக அதிகாரிகள் கூறியுள்ளனர். அது எந்தெந்த சுங்கச்சாவடிகளுக்கு செல்லாது என்பதை இப்போது பார்ப்போம்.

டிசம்பர் 15ம் தேதியிலிருந்து நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை கட்டாயமாகிறது. இந்த நடைமுறை காரணமாக அனைவரும் வாகனத்தின் முகப்பில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டி சென்றால் கட்டணம் குறைவாக இருக்கும். அப்படி மாறாதவர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.

ஏனெனில் ஃபாஸ்டேக் ஒட்டிய வாகனங்களை சென்சார் எளிதாக ஸ்கேன் செய்து அவர்களின் வங்கி கணக்கில் பணத்தை கழித்துக்கொள்ளும. எனவே சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டிய அவசியமும் ஏற்படாது.

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

இந்த முறையில் தான் சுங்கக்சாவடியின் அனைத்து வழிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு வழி மட்டுமே பணம் செலுத்தி செல்லும் வகையில் இருக்கும் என்றும் கட்டணம் அதிகமாக செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலை

மாநில நெடுஞ்சாலை

நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் ஸ்கேனிங் முறையில் கட்டணம் செலுத்தி கடந்து செல்ல முடியும் என்றாலும் மாநில நெடுஞ்சாலைகளில் இதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அதிகாரிகள்.

5 டோல்கேட்டுகள்

5 டோல்கேட்டுகள்

அதன்படி சென்னையில் உள்ள பெருங்குடி, சோழிங்கநல்லூர், நாவலூர், மேடவாக்கம், துரைபாக்கம் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வழக்கமான முறையில் பணம் கட்டிய பிறகே பயணிக்க முடியும் என தமிழக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வருடம் ஒருமுறை

வருடம் ஒருமுறை

இந்த சுங்கச்சாவடிகளை சுற்றி ஏழு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மக்கள் ஒரு வருடத்திற்கு ஒரு முறை பணம் கட்டி ஸ்மார்ட் கார்டு வாங்கி வேகமாக கடந்து செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.

வாகன ஓட்டிகள்

வாகன ஓட்டிகள்

மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை. இதனால் லட்சக்கணக்கான வானங்கள் இந்த சுங்கச்சாவடிகளில் பணம் கட்டியே கடந்து செல்கின்றன. இதற்கு கால தாமதம் ஆகிறது.இதனிடையே மாநில நெடுஞ்சாலைகளிலும் ஃபாஸ்டேக் முறையை கொண்டுவர வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

English summary
Fastag Does not work to the toll gates in Perungudi, Cholinganallur, Navalur, Medavakkam, Duraipakkam at Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X