சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வேகமாக செல்லும் ரயில்கள்... சாதாரண பெட்டிகள் இல்லை... பாமக ராமதாஸ் கண்டனம்!!

Google Oneindia Tamil News

சென்னை: மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் அனைத்து தொடர் ரயில் வண்டிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். தொடர் வண்டித்துறை ஏழைகளின் தோழனாக தொடர வேண்டும் என்று பாமக நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் தனது ட்விட்டர் பதிவில், ''மணிக்கு 130 கி.மீக்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் தொடர்வண்டிகளில் அனைத்துப் பெட்டிகளும் குளிரூட்டி (ஏசி) வசதி கொண்டவையாக மாற்றப்படும் என தொடர் வண்டித்துறை அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர் வண்டிகளில் பயணம் செய்யும் ஏழைகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

Faster premium trains have only AC coaches PMK Ramadoss condemned

அனைத்துத் தொடர் வண்டிகளிலும் ஏழைகள் பயணிக்கும் வகையில் குறைந்தது 50% பெட்டிகள் சாதாரண வகுப்பு பெட்டிகள் இடம் பெற வேண்டும். அதேபோல் முன்பதிவு இல்லாத பெட்டிகளும் தொடர வேண்டும். தொடர் வண்டித்துறை ஏழைகளின் தோழனாக தொடர வேண்டும்'' என்று பதிவிட்டுள்ளார்.

மணிக்கு 130 கி.மீ.க்கும் கூடுதல் வேகத்தில் செல்லும் ரயில்களின் அனைத்துப் பெட்டிகளும் ஏசி வசதி கொண்டவையாக மாற்றப்படும் என, ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் டி.ஜே.நாரைன் சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

Faster premium trains have only AC coaches PMK Ramadoss condemned

மேலும், அவரது அறிவிப்பில், இந்த மாற்றம் தொழில்நுட்ப ரீதியில் அவசியமானது. அனைத்துப் பெட்டிகளும் ஏசி வசதி கொண்டவையாக இருந்தாலும், கட்டணம் மிக அதிகமாக இருக்காது. தற்போது ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ஆகிய ரயில்கள் மணிக்கு 120 கி. மீட்டர் வேகத்தில் செல்கின்றன.

இந்தியாவில் மனஅழுத்தம்... இந்த வயதினர்தான் அதிகம்... 665% அதிகரிப்பு... அதிர்ச்சி ரிப்போர்ட்!! இந்தியாவில் மனஅழுத்தம்... இந்த வயதினர்தான் அதிகம்... 665% அதிகரிப்பு... அதிர்ச்சி ரிப்போர்ட்!!

இவை 130 கி. மீட்டர் மற்றும் அதற்கு மேலான வேகத்தில் செல்வதற்கு திறன் பெற்றவை. மணிக்கு 110 கி. மீட்டர் வேகத்தில் செல்லக் கூடிய ரயில்களில் சாதாரண கோச்கள் தொடரும் என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் இதற்கு பாமக நிறுவனர் எஸ். ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

English summary
Faster premium trains have only AC coaches PMK Ramadoss condemned
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X