சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்ன நடந்தது.. சென்னையில் பாத்திமா தந்தையிடம் 4 மணி நேரம் விசாரித்த குற்றப்பிரிவு போலீஸ்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுதர்சன் பத்மநாபனை விடக்கூடாது.. பாத்திமா தந்தை ஆவேசம்

    சென்னை: ஐஐடி மாணவி, பாத்திமா தற்கொலை வழக்கு தொடர்பாக, அவரது தந்தை அப்துல் லத்தீப்பிடம், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 4 மணி நேரத்திற்கும் மேலாக, விசாரணை நடத்தியுள்ளனர்.

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள கிளி கொல்லூர் பிரியதர்ஷினி நகரை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் மகள் பாத்திமா லத்தீப்.

    சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் முதுநிலை முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் கடந்த 8ம் தேதி பாத்திமா, தான் தங்கியிருந்த விடுதி அறையில், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பேராசிரியர்

    பேராசிரியர்

    இதுகுறித்து கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினர் அப்போது தெரிவித்தனர். ஆனால் பாத்திமாவின் செல்போனில் அவர் தற்கொலைக்கு ஐஐடியில் பணியாற்றும் இணை பேராசிரியர், சுதர்சன் பத்மநாபன்தான் காரணம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

    போலீஸ் விசாரணை

    போலீஸ் விசாரணை

    இதையடுத்து, இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டது. எனவே, இந்த வழக்கு விசாரணை மத்திய குற்றப்பிரிவு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக குற்றப்பிரிவு கூடுதல் துணை கமிஷனர் மெக்லினா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கேரள இல்லத்தில் பாத்திமாவின் தந்தை லத்தீப்பிடம் இன்று காலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணை

    விசாரணை

    அப்போது ஐஐடியில் பாத்திமாவுக்கு நடைபெற்றதாக கூறப்படும் துன்புறுத்தல் பற்றி முன்பே தந்தையிடம் ஏதாவது தகவல் தெரிவித்தாரா, அல்லது தந்தைக்கு அது தொடர்பாக வேறு வகையில் ஏதாவது தகவல் கிடைத்ததா? இது குறித்து யாரிடமாவது புகார் அளிக்கப்பட்டதா? என்பது தொடர்பாக அவரிடம் போலீசார் விபரம் கேட்டு உள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சென்னையில் பாத்திமா தந்தை

    சென்னையில் பாத்திமா தந்தை

    சுமார் 4 மணி நேரம், இந்த விசாரணை நடைபெற்றுள்ளது. இதையடுத்து பாத்திமாவின் சகோதரரிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். முன்னதாக, நேற்று சென்னை வந்திருந்த அப்துல் லத்தீப், தமிழக டிஜிபி திரிபாதியையும், பின்னர், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியையும், சந்தித்து பாத்திமா வழக்கில், விரைந்து, நீதி கிடைக்க வழி ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    English summary
    Chennai police investigate Fathima latheef's father who allegedly comitt suicide in IIT Madras.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X