சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா அதிநவீன விவிஐபி விமானத்தில், திருப்பதிக்கு வந்த ராம்நாத் கோவிந்த்.. என்ன சிறப்பு?

Google Oneindia Tamil News

சென்னை: விவிஐபிகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள 'ஏர் இந்தியா ஒன்' விமானத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று திருமலை திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தார். முன்னதாக இந்த விமானம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது.

ஏர் இந்தியா ஒன் 777 விமானம் தனித்துவமான பல வசதிகளை உள்ளடக்கியதாகும்.

Features of Air India One 777 in which President Ramnath Kovind visit Tirumala

விமானத்தின் நவீன பாதுகாப்பு அமைப்புகளை கையாள, விமானிகளுக்கு, இந்திய விமானப்படை பயிற்றுநர்கள் பயிற்சி அளிப்பார்கள்.

டல்லாஸில் (அமெரிக்கா) போயிங் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இந்த விமானங்கள் மேம்பட்ட ராணுவ பாதுகாப்பு சிஸ்டம் கொண்டது. கேபின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த நவீன வகை விமானத்தில், GE90-115 இரட்டை இன்ஜின்கள் உள்ளன. எனவே அதிகபட்சமாக 900 கி.மீ வேகத்தில் இந்த விமானம் பறக்க முடியும்.

ரொம்ப நேரமா ஒரே இடத்தில் நிற்குதே நிவர் புயல்.. திசைமாறுமா, வலுவிழக்குமா? பாலச்சந்திரன் பளிச் பதில்ரொம்ப நேரமா ஒரே இடத்தில் நிற்குதே நிவர் புயல்.. திசைமாறுமா, வலுவிழக்குமா? பாலச்சந்திரன் பளிச் பதில்

இந்த விமானங்கள் குடியரசு தலைவர், பிரதமர், துணை குடியரசு தலைவர் ஆகியோர் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகிறது. எனவே, நவீன வசதிகள் கொண்டதாக உள்ளது. ராணுவ பாதுகாப்பு சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது.

Features of Air India One 777 in which President Ramnath Kovind visit Tirumala

எதிர்பாராத விபத்து ஏற்பட்டால் கூட பயணியை பாதுகாக்கும் வகையில் எல்ஏஐஆர்சிஎம் வசதி உள்ளது. இந்த விமானம், $190 மில்லியன் மதிப்புள்ளதாகவும்.
இந்த விமானத்தை குறி வைத்து ஏதாவது தாக்குதல்கள் நடத்த முற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க மட்டுமின்றி, பதில் தாக்குதல் கொடுப்பதற்கான வசதிகளும் உள்ளன.

English summary
Features of Air India One 777, The plane's advance defence systems will call for training of pilots under Indian Air Force instructors. Traditionally, Air India pilots have been flying the Air India One planes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X