சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிடிஎப் வாசனை விடுங்க.. ‘பைரோஸ்’ தெரியுமா? - சூப்பர் பைக்கில் மாஸ் காட்டும் பெண் யூடியூபர்

Google Oneindia Tamil News

சென்னை: பிரபல மோட்டோ யூடியூபர் TTF வாசன் தனது பிறந்தநாளன்று நடத்திய ரசிகர்கள் சந்திப்புக்கு கூடிய கூட்டத்தால் ஊடகங்களில் அவர் குறித்த செய்திகள் குவிந்து வரும் நிலையில் அவரைபோலவே சூப்பர் பைக்குகளில் ரெய்டு செய்து வீடியோ வெளியிட்டு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார் பெண் யூடியூபர் பைரோஸ்.

சென்னையை சேர்ந்த பைரோஸ் என்ற மாணவி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். யமஹா R15 என்ற பைக்கை வாங்கி இவர் வீடியோ வெளியிடத் தொடங்கினார்.

தொடர்ந்து பைக்குகள் குறித்தும், பைக் ரெய்டு குறித்தும் தனது PYROS GIRL என்ற யூடியூப் சேனலில் வீடியோக்களை அவர் பதிவிட்டு வந்தார்.

ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மிகவும் கலங்கி பேசிய டிடிஎஃப் வாசன்.. ஏறி மிதிக்காதீங்கன்னு குமுறல் ப்ளீஸ் என்னை மன்னிச்சிடுங்க.. மிகவும் கலங்கி பேசிய டிடிஎஃப் வாசன்.. ஏறி மிதிக்காதீங்கன்னு குமுறல்

பெண் பைக்கர்

பெண் பைக்கர்

சேனலை தொடங்கிய 10 மாதங்களிலேயே 4.8 லட்சம் சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ள இவரை இன்ஸ்டாகிராமிலும் பலர் பின்பற்றி வருகின்றனர்.
பெண்கள் என்றாலே ஸ்கூட்டியில் செல்ல வேண்டும் என்ற மனநிலை தற்போது வரை தொடர்ந்து வரும் நிலையில், பெண்களாலும் சூப்பர் பைக்குகளை ஓட்ட முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல இடங்களுக்கு பைக்கில் ரெய்டு சென்று வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

வாசனுடன் சந்திப்பு

வாசனுடன் சந்திப்பு

பைரோசின் யூடியூப் வீடியோக்களை ஏராளமானோர் பார்வையிடத் தொடங்கினர். R15 இல் பைக் ஓட்டத் தொடங்கிய பைரோஸ் அடுத்து விலை உயர்ந்த BMW பைக், கவாசகி நிஞ்சா போன்ற பைக்குகளையும் ஓட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார். அண்மையில் அதிக விவாதத்திற்கு உள்ளாகி இருக்கும் பைக் யூடியூபர் TTF வாசனையும் சந்தித்து ஒன்றாக வீடியோ வெளியிட்டு உள்ளார் பைரோஸ்.

ரசிகர்கள் சந்திப்பு

கடந்த ஏப்ரல் மாதம் இவரும் தனது ரசிகர்களை சந்திப்பதாக அறிவித்ததை தொடர்ந்து ஏராளமானோர் அங்கு கூடி அவருடன் செல்பி எடுக்க முயன்றனர். இதனால் அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு போலீசார் தலையிட்டு அவர்களை அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது. யார் வேண்டுமானாலும் பைக் ஓட்டலாம். அதை யூடியூபில் பதிவிட்டு பிரபலமும் ஆகலாம். அதில் தவறில்லை. ஆனால், போக்குவரத்து விதிகளை மீறி அதிவேகத்துக் பைக்குகளை இயக்குவது யூடியூபர்கள் மட்டுமின்றி அதன் ரசிகர்களுக்கும் ஆபத்தாக முடியும்.

யார் இந்த வாசன்?

யார் இந்த வாசன்?

கோவையை சேர்ந்த வாசன் என்ற இளைஞர் பைக்கில் அதிக வேகத்தில் சாகசம் செய்து அதை வீடியோவாக பதிவு செய்து Twin Throttlers என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். தற்போது இவரது யூடியூப் சேனலுக்கு இருக்கும் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை 27 லட்சம். இவர் கடந்த சில நாட்கள் முன்பாக தனது பிறந்தநாளை முன்னிட்டு நடத்திய ரசிகர்கள் சந்திப்பில் ஆயிரக்கணக்கானோர் கூடியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

English summary
Female Bike youtuber Pyros girl gets famous along with TTF Vasan: பிரபல மோட்டோ யூடியூபர் TTF வாசன் தனது பிறந்தநாளன்று நடத்திய ரசிகர்கள் சந்திப்புக்கு கூடிய கூட்டத்தால் ஊடகங்களில் அவர் குறித்த செய்திகள் குவிந்து வரும் நிலையில் அவரைபோலவே சூப்பர் பைக்குகளில் ரெய்டு செய்து வீடியோ வெளியிட்டு லட்சக்கணக்கான சப்ஸ்கிரைபர்களை பெற்றுள்ளார் பெண் யூடியூபர் பைரோஸ்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X