சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரி பாலியல் தொல்லை - முதல்வர் நடவடிக்கை எடுக்க கமல் ட்வீட்

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன என்று மநீம தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரியிடம் சிறப்பு டிஜிபி அந்தஸ்தில் இருந்த ராஜேஸ்தாஸ் தவறாக நடக்க முயன்றதாக புகார் எழுந்துள்ளது.

Female IPS officer sexually harassed by senior police officer - Kamal Haasan shocking tweets

இந்த சம்பவம் குறித்து இரு தினங்களுக்கு முன்பு தமிழக சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி திரிபாதியிடமும் உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடமும் பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரி நேரில் புகாரளித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அளித்த பாலியல் புகாரையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. கனிமொழி எம்.பி, தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி ஆகியோர் கடும் கண்டனங்களை பதிவிட்டுள்ளனர்.

பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : காவல்துறையை களங்கப்படுத்தி விட்டார் ராஜேஷ் தாஸ் - ஈஸ்வரன் கண்டனம்பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை : காவல்துறையை களங்கப்படுத்தி விட்டார் ராஜேஷ் தாஸ் - ஈஸ்வரன் கண்டனம்

ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் தாஸ் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு காவல்துறை உயரதிகாரியே பாலியல் தொல்லை கொடுத்த செய்தி அதிர்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்க முதல்வர் ஆவண செய்ய வேண்டும் என்றும் கமல்ஹாசன் அந்த ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

English summary
The news that a female IPS officer was sexually harassed by a senior police officer is shocking. Kamal Haasan also posted on his Twitter page that the Chief Minister should take action to get justice for the victim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X