சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வசந்தாவுக்கு வந்த திடீர் வலி.. பிரசவம் ஆன ஒரே நாளில் பெண் போலீஸ் உயிரிழப்பு.. கலங்கிபோன சென்னை

சென்னையில் பெண் போலீஸ் கொரோனாவுக்கு உயிரிழந்தார்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பாதிப்பால் குழந்தை பெற்ற அடுத்த நாளே பெண் போலீஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா 2வது அலையினால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது... முதல் அலையைவிட இரண்டாவது அலை பரவலில் நிறைய உயிரிழப்புகள் ஏற்பட்டன..

ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி ஆரம்பிச்சாச்சு.. 3 மணி நேரம்.. உங்க ஏரியாவில் எப்படி.. ட்வீட் போட்டு அமைச்சரை சீண்டிய கஸ்தூரி

இதனால், தமிழக அரசு அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. தொற்றும் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது... இதையடுத்து பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

 அதிகரிப்பு

அதிகரிப்பு

எனினும், தமிழகத்தில் கடந்த வாரம் முதல் மறுபடியும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது... இது பொதுமக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது... மே 2வது வாரத்தில் தினசரி கேஸ்கள் 36 ஆயிரத்தை தாண்டி சென்றது.. அது இப்போது படிப்படியாக 2 ஆயிரத்திற்கு கீழ் குறைந்து கொண்டிருக்கிறது.

தொற்று

தொற்று

தமிழ்நாட்டில் இன்று 1908 பேருக்கு கொரோனா தொற்று உறுதி தமிழ்நாட்டில் கொரோனாவால் இன்று மேலும் 29 பேர் உயிரிழந்துள்ளனர் கொரோனாவுக்கு தற்போது 20,217 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் இன்று மட்டும் மாநிலத்தில் கொரோனாவில் இருந்து 2,047 பேர் குணமடைந்துள்ளனர்... இன்று சென்னையில் 203 பேருக்கும் கோவையில் 208 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வயதானவர்கள்

வயதானவர்கள்

அதேசமயம், முதல் அலை, 2வது அலை, 3வது அலை என அடுத்தடுத்து வைரஸ் பரவல் தாக்குதல் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது.. வயது வித்தியாசம் பாராமல், ஏழை, பணக்காரன் பாகுபாடுமின்றி அனைவரையும் இந்த வைரஸ் தாக்கி கொண்டிருக்கிறது.. வயதானவர்கள் முதல் பிஞ்சுகள் வரை இந்த வைரசால் உயிரிழந்து, நம் இதயத்தை நொறுங்கடிக்கும் அளவுக்கு துயர சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன..

அதிர்ச்சி

அதிர்ச்சி

அந்த வகையில், ஒரு பெண் போலீஸின் மரணம் சென்னையில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.. ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் வசந்தா.. 47 வயதாகிறது.. இவர் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் போலீசாக பணியாற்றி வந்துள்ளார்... வசந்தா கர்ப்பமாக இருந்தார்.. அதனால், அரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார்..

 டெஸ்ட்கள்

டெஸ்ட்கள்

அந்தநேரம், வழக்கமான டெஸ்ட்கள் வசந்தாவுக்கு எடுக்கப்பட்டன.. அப்போதுதான் கொரோனா டெஸ்ட்டும் எடுக்கப்பட்டது... அப்போதுதான் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.. இதனால், கடந்த 28-ம் தேதி எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் வசந்தா அனுமதிக்கப்பட்டார்.. தொடர்ந்து சிகிச்சையும் அவருக்கு தரப்பட்டது. நேற்றிரவு திடீரென வசந்தாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது.. அடுத்த சில நிமிடங்களில் பெண்குழந்தையும் பிறந்தது.

 உயிரிழப்பு

உயிரிழப்பு

ஆனால், வசந்தா இன்று காலை 4.15 மணிக்கு உயிரிழந்தார்.. கொரோனா தொற்றின் காரணமாக சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அவர் உயிரிழந்தார்... குழந்தை பிறந்த ஒரே நாளில் பெண் போலீஸ் கொரோனா தொற்றினால் பலியான சம்பவம் சோகத்தை தந்து வருகிறது.

English summary
Female women Police Vasantha died after infected with corona
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X