• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நெருங்கும் ஓட்டு எண்ணிக்கை...பதறும் எதிர்க்கட்சிகள்...இவிஎம் சந்தேகங்கள் சரியா?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு ஏப்ரல் 6 ம் தேதி, ஒரே கட்டமாக நடத்தப்பட்டது. இதில் பதிவான ஓட்டுக்கள் மே 2 ம் தேதி எண்ணப்பட உள்ளன. இதனால் ஓட்டு எண்ணும் மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அன்றைய தினம் முடிவுகள் வெளியாக இரவு 12 மணி வரை ஆகும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பிருந்தே பிஸியாக இருந்த அரசியல் தலைவர்கள், தேர்தல் முடிந்ததும் அமைதியாகி விட்டனர். அதிமுக.,வை பொறுத்தவரை முதல்வர் பழனிசாமி, ஹெர்னியா அறுவை சிகிச்சை முடித்து வீட்டில் இருந்தார். தற்போது கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பதால், அது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். ராஜேந்திர பாலாஜி திருப்பதி சென்றார். செல்லூர் ராஜூ குடும்பத்துடன் கொடைக்கானலில் ஓய்விற்கு சென்றார். மற்றவர்கள் பற்றிய விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.

தமிழக அரசுக்கு தேர்தல் ஜுரம்... யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து..! தமிழக அரசுக்கு தேர்தல் ஜுரம்... யானைகள் பராமரிப்பு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து..!

புகார் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்

புகார் கொடுக்கும் எதிர்க்கட்சிகள்

அதே சமயம், இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் ஏசி.,க்கள் இயங்குகின்றன, மையங்களின் அருகே மர்ம கன்டெய்னர் இருந்தது, மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளது, இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மைய வளாகத்தில் லேட்பாட் உடன் அதிகாரிகள் சென்று வந்தனர் என திமுக தரப்பில் தினமும் பல குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புகார் மனு ஒன்றை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அளித்துள்ளார்.

கிளம்பும் இவிஎம் சந்தேகங்கள்

கிளம்பும் இவிஎம் சந்தேகங்கள்

ஒட்டு எண்ணிக்கைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் வழக்கம் போல் தற்போதும் இவிஎம் இயந்திரங்கள் தொடர்பான பல்வேறு சந்தேகங்கள் கிளம்பி உள்ளன. ஒவ்வொரு தேர்தலின் போதும், இவிஎம் இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கே ஓட்டுக்கள் பதிவாகிறது, இயந்திரத்தை ஹேக் செய்யப்படக் கூடியவை என்பது போன்ற சந்தேகங்கள் கிளப்பப்படுவது வழக்கமாகி விட்டது. இந்த குற்றச்சாட்டுக்களை தேர்தல் கமிஷனும் பலமுறை மறுத்துவிட்டது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் இவிஎம் தொடர்பான சந்தேகங்கள் சரிதானா, இவிஎம் பற்றிய முழு விபரங்களை இங்கே பார்க்கலாம்.

இவிஎம் இந்தியாவிற்கு புதிதல்ல

இவிஎம் இந்தியாவிற்கு புதிதல்ல

தேர்தலில் இவிஎம் இயந்திரங்களை பயன்படுத்தும் திட்டம் 1980 களிலேயே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இருந்தாலும் 2004 லோக்சபா தேர்தலின் போது தான் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்டது. தற்போது உலக அளவில் 30 நாடுகளில் மட்டுமே இவிஎம் இயந்திரங்கள் தேர்தலில் பயன்படுத்தப்படுகின்றன. பல்வேறு காரணங்களால் 11 நாடுகள் இவிஎம் முறையை நிராகரித்துள்ளன. தற்போது வரை இந்த நாடுகளில் ஓட்டுச்சீட்டு முறையே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஹேக் செய்ய முடியாது

ஹேக் செய்ய முடியாது

பேலட் யூனிட், கன்ட்ரோல் யூனிட் என இரு பகுதிகளைக் கொண்டது தான் இவிஎம் இயந்திரம். இவை இரண்டும் 5 மீட்டர் கேபிளால் இணைக்கப்பட்டிருக்கும். பேலட் யூனிட்டில் வேட்பாளர்களின் பெயர் பட்டியல், சின்னம் இடம்பெற்றிருக்கும். கன்ட்ரோல் யூனிட்டின் கட்டுப்பாடு தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருக்கும். இவிஎம் இயந்திரத்தில் தனித்துவமான டிவைஸ் ஒன்று பொறுத்தப்பட்டிருக்கும். இவற்றை உடைக்கவோ, ஹேக் செய்யவோ முடியாது. வைஃபை, ப்ளூடூத் போன்ற எந்த தொழில்நுட்ப முறையையும் பயன்படுத்தி ஹேக் செய்ய முடியாது.

கட்டுப்பாடு தேர்தல் கமிஷனிடம்

கட்டுப்பாடு தேர்தல் கமிஷனிடம்

இந்திய தேர்தல் கமிஷனின் நேரடி கண்காணிப்பில் தான் இவிஎம் இயந்திரங்கள் உருவாக்கப்படுகின்றன. இவிஎம்.,ஐ கட்டுப்படுத்தும் டிவைஸ், தேர்தல் கமிஷனால் தேர்ந்தெடுக்கப்பட்ட 2 முதல் 3 இன்ஜினியர்கள் குழுவால் உருவாக்கப்படுகிறது. இதன் மூல குறியீடுகளும் இவர்களாலேயே உருவாக்கப்படுகிறது. இந்த மூல குறியீடுகள் தனித்துவமான மைக்ரோ கன்ரோலர்களால் பாதுகாக்கப்படுகிறது. இவற்றின் மொத்த கட்டுப்பாடும் தேர்தல் கமிஷனிடம் இருக்கும் ஹார்டுவேரிலேயே இணைக்கப்பட்டிருக்கும். மைக்ரோ கன்ட்ரோலர்கள் மத்திய பாதுகாப்பு துறையின் செயல்படும் 2 நிறுவனங்களால் கட்டமைக்கப்படும்.

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை

2017 ம் ஆண்டு ஆர்டிஐ மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ள தேர்தல் கமிஷன், பேலட் யூனிட் மற்றும் கன்ட்ரோல் யூனிட் ஆகிய அனைத்தும் தேர்தல் கமிஷனின் முழு கட்டுப்பாட்டில் மட்டும் இயங்கும் என தெரிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு இவிஎம் இயந்திரத்திற்கும் தனிப்பட்ட அடையாள குறியீடு இருக்கும். இவைகள் மிக ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒருவேளை இவிஎம் இயந்திரம் திருடப்பட்டால் அதிலிருந்த பதிவுகளை தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹார்ட்வேர் மூலம் பெற முடியுமா என்பது பற்றி தேர்தல் கமிஷன் இதுவரை விளக்கவில்லை. அதே சமயம் இவிஎம் ஹேக் செய்யப்படும் என குற்றம்சாட்டும் எவரும் தேர்தல் கமிஷனின் சவாலை ஏற்று, ஹேக் செய்ய முடியும் என்பதை நிரூபிக்கவில்லை.

இவிஎம் தொடர்பான போதிய விழிப்புணர்வு இல்லாததால், இந்தியாவில் ஒவ்வொரு தேர்தலின் போதும் இது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்படுவதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Electronic voting in India has consistently met with doubts and suspicions as public knowledge on this matter remains almost nil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X