சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவர் அமைச்சரானால் ஆபத்து.. ஓ.பி.ஆர் அமைச்சர் பதவிக்கு எதிர்ப்பு.. அதிமுகவில் நிழல் யுத்தம்!

அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு அதிமுகவில் சிலர் எதிரிப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வருகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    OP Ravindranath Pressmeet: அதிமுகவின் ஒரே எம்பி, ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் தான்- வீடியோ

    சென்னை: அதிமுக எம்பி ஓ.பி. ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கு அதிமுகவில் சிலர் எதிரிப்பு தெரிவித்து வருவதாக செய்திகள் வருகிறது.

    லோக்சபா தேர்தலில் நாடு முழுக்க பாஜக சிறப்பான வெற்றியை பதிவு செய்தாலும் தமிழகத்தில் பாஜகவால் காலூன்ற முடியவில்லை. ஒரு இடத்தில் பாஜக கட்சி தமிழகத்தில் வெற்றிபெறவில்லை.

    அதிமுக மட்டுமே தமிழகத்தில் பாஜக கூட்டணியில் இருந்து வெற்றிபெற்றது. தேனியில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வமின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத் மட்டுமே வெற்றிபெற்றார்.

    ராஜினாமாவில் ராகுல் உறுதி- புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி! ராஜினாமாவில் ராகுல் உறுதி- புதிய தலைவரை தேர்வு செய்ய கூடுகிறது காங். காரிய கமிட்டி!

    எப்படி

    எப்படி

    இந்த நிலையில் பாஜக இந்த் முறை தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து இருந்தாலும், கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சரவையில் இடம் கொடுக்க முடிவெடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுக்க சிறப்பான ஒத்துழைப்பை தந்த கூட்டணி கட்சிகளுக்கு பாஜக இந்த முறை அமைச்சரவையில் இடம் கொடுக்க உள்ளது. தேர்தல் நேரத்தில் கை கொடுத்ததால் பாஜக இந்த முடிவை எடுத்துள்ளது.

    அதிமுக

    அதிமுக

    இந்த கட்சிகளில் அதிமுகவும் இருக்கிறது. அதிமுக கட்சி தமிழகத்தில் பாஜகவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. பாஜக கட்சி தமிழகத்தில் வளர்வதற்கு அதிமுக பெரிய அளவில் உதவி வருகிறது என்று கூட கூறலாம். இதற்கு கைமாறாக அதிமுகவிற்கு மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க பாஜக முடிவெடுத்து இருக்கிறது.

    எத்தனை இடம்

    எத்தனை இடம்

    அதன்படி அதிமுக மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்களை பெற வாய்ப்பு இருக்கிறது. மக்களை எம்.பி , மாநிலங்களவை எம்பி இரண்டில் இருந்தும் மொத்தமாக இருவரை இதற்காக அதிமுக தேர்வு செய்து அனுப்ப வேண்டும். அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவியும், இன்னொருவருக்கு இணையமைச்சர் பதவியையும் பாஜக வழங்க உள்ளது என்று கூறுகிறார்கள்.

    ஆனால் எதிர்ப்பு

    ஆனால் எதிர்ப்பு

    தற்போது அதிமுக சார்பாக இருக்கும் மக்களவை எம்பி ஓ.பி.ரவீந்திரநாத் மட்டுமே. இதனால் இவருக்கு மட்டுமே அமைச்சர் பதவி வழங்க முடியும். ஆனால் அதிமுகவில் சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருப்பதாக தெரிகிறது. முக்கியமாக முன்னாள் எம்.பிக்கள் சிலரும், எடப்பாடி பழனிச்சாமியின் தொண்டர்கள் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள் என்று தெரிகிறது.

    ஏன் எதிர்ப்பு

    ஏன் எதிர்ப்பு

    பாஜக தலைவர்களின் ஆதரவு காரணமாக அதிமுகவில் கொஞ்சம் கொஞ்சமாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது பழனிச்சாமி தரப்பிற்கு கொஞ்சம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த நிலையில் ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கிடைத்தால் பன்னீர்செல்வம் இன்னும் பலம் பெறுவார், அவர் அமைச்சரானால் நமக்குத்தான் ஆபத்து என்று அதிமுகவில் சிலர் கருதுகிறார்கள்.

    வேறு ஐடியா

    வேறு ஐடியா

    இதனால்தான் தற்போது அதிமுகவில் உள்ள மாநிலங்களவை எம்.பிக்களை அமைச்சராக்க அதிமுக முடிவெடுத்து இருப்பதாக தெரிகிறது. அதன்படி அதிமுகவை சேர்ந்த 2 மாநிலங்களவை எம்.பிக்களை அமைச்சர் பதவிக்கு எடப்பாடி பழனிச்சாமி பரிந்துரை செய்வார் என்று என்று கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் இன்னும் சில நாட்களில் அடுத்த தர்மயுத்தம் ஏற்பட கூட வாய்ப்புள்ளது.

    English summary
    Few rebels opposing MP post of OP Ravindranath inside the AIADMK party
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X