சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதுவும் புரியலையே.. அவங்களை மட்டும் ஏன் சந்தித்தார்.. சசிகலா எடுத்த அவசர முடிவு.. விலகாத 3 மர்மங்கள்

Google Oneindia Tamil News

சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க போவதாக சசிகலா நேற்று அறிவித்த நிலையில் அவரின் முடிவு பல்வேறு விஷ்யங்களுக்காக கேள்விக்குள்ளாகி உள்ளது. கடந்த சில நாட்களாக அவர் செயல்பட்ட விதத்திற்கும், நேற்று அவர் எடுத்த முடிவிற்கு சம்பந்தமே இல்லை என்று அமமுக நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள்.

அரசியலில் இருந்து விலகி இருக்க போவதாக சசிகலா அறிவித்து இருப்பது அமமுக நிர்வாகிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சிறையில் இருந்து வந்ததும் அதிமுகவை மீட்டு விடுவார் என்று கனவு கண்ட அமமுக நிர்வாகிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.

தினகரன் உட்பட சிலர் வற்புறுத்தியும் கூட தன் முடிவில் உறுதியாக இருந்து, அரசியல் வாழ்க்கையில் இருந்து சசிகலா விலகி இருக்கிறார். தேர்தலுக்கு முன் இவர் அடித்த ஸ்டண்ட் "பலர்" போட்டு வைத்த திட்டங்களை காலி செய்துள்ளது.

அதிமுக கூட்டணியில் அமமுக சாத்தியமா?.. எடப்பாடியாரே ஒத்துக்கிட்டாலும் தினகரன் ஏத்துக்க மாட்டாரே! அதிமுக கூட்டணியில் அமமுக சாத்தியமா?.. எடப்பாடியாரே ஒத்துக்கிட்டாலும் தினகரன் ஏத்துக்க மாட்டாரே!

 சசிகலா

சசிகலா

அரசியலில் இருந்து விலகும் முடிவை சசிகலா எப்போது எடுத்தார் என்பதுதான் தற்போது கேள்வியாக உள்ளது. ஏனென்றால் கடந்த பிப்ரவரி 24ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளின் போது கூட "ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கவேண்டும். விரைவில் மக்களைச் சந்திப்பேன்" என்று சசிகலா கூறி இருந்தார்.

சந்தேகம்

சந்தேகம்

மக்களை சந்திப்பேன் என்று கூறிய சசிகலா திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிக்க காரணம் என்ன என்பதுதான் தற்போது இருக்கும் கேள்வியே. ஒரே வாரத்தில் சசிகலாவின் மனதை மாற்றிய விஷயம் எது? 4 வருடம் சிறையில் இருந்த போதெல்லாம் உறுதியாக இருந்தவர், இந்த ஒரு வார இடைவெளியில் தனது முடிவை மாற்றிக்கொண்டது ஏன் என்பதுதான் முதல் மர்மமாக இருக்கிறது.

சந்திப்பு

சந்திப்பு

அதுவும் ஜெயலலிதா பிறந்த நாளின் போதுதான் சசிகலா நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்தார் . இயக்குனர் அமீரையும் சந்தித்தார். அதேபோல் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரை சந்தித்தார். அதே நாளில் சசிகலாவை சந்திக்க முடியாத சிலர் அவருக்கு போன் செய்தும் பேசி இருக்கிறார்கள். இதில் முக்கிய அரசியல் தலைவர்கள் சிலரும் உள்ளனர்.

தலைகள்

தலைகள்

இந்த மீட்டிங்கில் பேசியது என்ன?இப்படி ஆசையாக தலைவர்களை சந்தித்த சசிகலா இப்படி திடீரென மனம் மாறியது ஏன் என்பது இரண்டாவது மர்மமாக உள்ளது. இதெல்லாம் போக அதிமுக பொதுச்செயலாளர் பதவியை ரத்து செய்து இயற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கை விரைந்து விசாரிக்கும்படியும் சசிகலா மூலம் முயற்சிகள் செய்யப்பட்டன.

உறுதி

உறுதி

அதிமுகவின் பொதுச்செயலாளர் தான்தான் என்பதில் சசிகலா உறுதியாக இருந்ததால்தான் காரில் அதிமுக கொடி, தோளில் அதிமுக துண்டு என்று சசிகலா தொடக்கத்தில் இருந்தே தீவிரமாக செயல்பட்டு வந்தார். தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்பதற்காக தீர்க்கமாக மெசேஜ் அனுப்பி வந்தார். ஆனால் இப்படி உறுதியாக இருந்த சசிகலா எந்த புள்ளியில் மனம் மாறினார் என்பது கடைசி மர்மமாக உள்ளது.

 மர்மங்கள்

மர்மங்கள்

இப்படி ஒரு முடிவை சசிகலா எடுக்க எது தூண்டி இருக்கும், யார் தூண்டி இருப்பார் என்று புரியாத புதிராகவே உள்ளது. பல யுகங்களும், கணிப்புகளும் இதில் வைக்கப்பட்டாலும் சசிகலாவின் முடிவிற்கு யார் காரணம், என்ன காரணம் என்பது அவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். நாட்கள் செல்ல செல்லத்தான் உண்மையான பின்னணி தெரிய வரும்!

English summary
Few Unanswered questions on Sasikala's decision to leave active politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X