சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் திமுக எம்பி-க்களின் குரல் நாட்டுக்காகவும் தான்.. ஸ்டாலின் பேச்சு

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் ஜனநாயகத்தை காப்பாற்ற இரண்டாவது சுதந்திர போராட்டத்திற்கு தயாராகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னையில் மணவழகர் மன்றத்தின் 63-ம் ஆண்டு முத்தமிழ் விழாவில் பங்கேற்று பேசிய ஸ்டாலின் தமிழுக்கு இன்று ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறினார்.

Fight for has to be Even basic democracy fought.. Stalins speech

தமிழுக்கு ஏற்பட்டுள்ள சோதனையை முறியடிப்பதற்காக கட்சி, மதம், சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரும் ஒன்று சேர வேண்டிய சூழல் இது என்று அவர் தெரிவித்துள்ளார்.

திமுக எம்பி-க்களால் நாடாளுமன்றத்தில் சமத்துவம் சகோதரத்துவம் ஒலிக்க துவங்கியுள்ளது. தமிழகத்திற்காக மட்டுமின்றி இந்தியாவிற்காகவும் தான் திமுக எம்பி-க்கள் பேசுவதாக கூறினார்

தமிழக அரசியல் மேடைகளில் முழுமையாக தமிழை பேசிய அரசியல் தலைவர்களில் முதலாவது தலைவர் திரு.வி.க அவர்கள் தான். முழுமையாக தமிழைப் பேசி மேடைகளில் முழங்கியவர். அந்த குரல் தான் நாடாளுமன்றத்தில் இப்பொழுது ஒலிக்கத் துவங்கி இருக்கின்றது என குறிப்பிட்டார்.

ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்ரஜினி வரபோறார்.. கேஎஸ் அழகிரி விரும்பாவிட்டாலும் முக அழகிரி கட்டாயம் விரும்புவார்.. எஸ்வி.சேகர் நச்

மொழி தான் நம்மை இணைக்க கூடிய பந்தம். இந்தியில் நடத்திய தபால் துறை தேர்வை ரத்து செய்ய வைத்தது திமுக என்று ஸ்டாலின் குறிப்பிட்டார். புதிய கல்விக்கொள்கையில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்தும் திமுக சார்பில் அமைக்கப்பட்ட குழு பரிசீலித்து கொண்டிருப்பதாக கூறினார். குழுவின் அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

அரசியலில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால், நாம் மனிதர்கள் மனிதாபிமானம் உள்ளவர்கள். என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்,

சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மைக்கு மட்டுடமல்ல அடிப்படை ஜனநாயகத்திற்கு கூட போராட வேண்டிய நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

English summary
The DMK leader Stalin has said that the situation is preparing for a second freedom struggle to save the country's democracy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X