சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமுத்திரக்கனி அனுப்பி வைத்த ஜெனரேட்டர்.. சார்ஜ் போட்டு மகிழ்ந்த டெல்டா மக்கள்!

கரண்ட் இன்றி தவிக்கும் மக்களுக்கு சமுத்திரகனி ஜெனரேட்டர் வாங்கி தந்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சமுத்திரக்கனி அனுப்பி வைத்த ஜெனரேட்டர், மகிழ்ந்த டெல்டா மக்கள்!- வீடியோ

    சென்னை: புயல் பாதித்த மக்களுக்கு இயக்குனர் சமுத்திரகனி புது தினுசா உதவி செய்து வருகிறார்.

    புயலால் புரட்டி போட்ட வாழ்வை மீட்டெடுக்க தனிநபர்கள், இயக்கங்கள், அமைப்புகள், கல்லூரி மாணவர்கள் என எல்லாருமே களமிறங்கி உள்ளனர். இதில் பிரபலங்களும் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

    அந்த வகையில், நடிகரும் இயக்குனருமான சமுத்திரகனியும் மக்களுக்கு உதவ நினைத்தார். அதற்காக மக்களுக்கு என்ன மாதிரியான உதவி செய்யலாம் என யோசித்தார்.

    என்ன உதவி?

    என்ன உதவி?

    பாதிக்கப்பட்டவர்களுக்கு இப்போதைக்கு தேவை ஒன்று சாப்பாடு, இன்னொன்று கரண்ட். சாப்பாடு நிறைய பேர் கொண்டுபோய் கொடுத்து வருகிறார்கள். அரசும் தயாரித்து பொட்டலங்களை தந்து கொண்டு இருக்கிறது.

    கரண்ட் பிரச்சனை

    கரண்ட் பிரச்சனை

    மற்றொன்று கரண்ட். விழுந்து கிடக்கும் மரங்களை சீர்செய்யவே காலம் பிடிக்குமாம். அதனால் ராத்திரி பகலாக மின்வாரிய ஊழியர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். எனவே கரண்ட் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு செல்போனில் சார்ஜ் போட முடியாமல் கஷ்டப்படுவார்கள்.

    ஜெனரேட்டர்

    ஜெனரேட்டர்

    தாங்கள் என்ன நிலைமையில் இருக்கிறோம் என்பதை சொல்லக்கூட செல்போன்தேவை கட்டாய தேவை. எனவே செல்போனில் சார்ஜ் இல்லாமல் அவதிப்படுவர்களுக்காகவே ஜெனரேட்டரை அனுப்பி வைத்துள்ளார் சமுத்திரகனி. ஜெனரேட்டரை பாதிப்படைந்த மக்களுக்கு அனுப்ப காரணமே செல்போனில் சார்ஜ் போடுவதற்குத்தானாம்.

    நன்றி சொன்ன மக்கள்

    நன்றி சொன்ன மக்கள்

    இதையடுத்து சமுத்திரகனி கொடுத்த ஜெனரேட்டரை பார்த்த மக்கள் எல்லோருமே பல நாள் சார்ஜ் இல்லாம கிடந்த செல்போன்களை எடுத்து வந்து சார்ஜ் போட்டுக் கொண்டனர். அதோடு சமுத்திரகனிக்கும் நன்றி சொன்னார்கள். புயலால் வாழ்வை தொலைத்தவர்களுக்கு எல்லோரும் ஒரு வகையில் உதவி செய்து வரும் நிலையில் சமுத்திரகனியின் இந்த வித்தியாச உதவியும் பொதுமக்களிடையே பேசப்பட்டு வருகிறது.

    English summary
    Director and Actor Samuthirakani gave Generator to the Gaja victims
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X