சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பன்றிக் கறியை.. நல்லா இழுத்து கடித்து சுவைத்து சாப்பிடும் கமலா ஹாரிஸ்.. "ஓ மை காட்" என வியப்பு!

மாட்டுக்கறி சாப்பிடும் கமலா ஹாரீஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

சென்னை: கமலா ஹாரிஸ் பன்றிக்கறியை இழுத்து கடித்து சாப்பிடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.!

Recommended Video

    பன்றிக்கறியை நல்லா இழுத்து கடித்து சுவைத்து சாப்பிடும் கமலா ஹாரீஸ்.. வைரலாகும் வீடியோ

    உலகம் முழுக்க கமலா ஹாரிஸை பற்றிதான் பேச்சாக இருக்கிறது.. அமெரிக்க ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளரான ஜோ பைடன் செனட்டர் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்துள்ளார்.

    இவரை பற்றி அதிபர் ட்ரம்ப் எதை எதையோ சொல்லி கொண்டிருக்கிறார்.. குற்றச்சாட்டுகளை அவரே முன்வைக்கிறார்.. அவரே விளக்கமும் தருகிறார்.. "வெள்ளையர் அல்லாதவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது உங்களுக்குப் பிரச்சினையா" என்று கேள்வி கேட்டால், "இல்லவே இல்லை.. கமலா ஹாரிஸ் தேர்தலில் ஒரு அச்சுறுத்தலாவே இல்லை" என்கிறார்.

    மீண்டும் ஜில் ஜில்.. கூல் கூல்.. சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு மீண்டும் ஜில் ஜில்.. கூல் கூல்.. சென்னை, திருவண்ணாமலை உள்பட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

    ஊடகங்கள்

    ஊடகங்கள்

    இந்நிலையில், கடந்த சில நாட்களாகவே இந்திய மீடியாக்களில் இவரது பெயர் அடிபட்டு கொண்டே இருக்கிறது.. இதற்கு காரணம், கமலாவின் தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர், தாய் இந்தியர் என்பதால்தான். ஒரு இந்தியர் அமெரிக்காவின் துணை அதிபராகப் போகிறார் என்று பலரும் பெருமையாக பேசிக் கொண்டுள்ளனர். ஆனால் தன்னை ஒரு போதும் இந்தியர் என்று சொல்லிக் கொள்ள விரும்பாதவர் கமலா ஹாரிஸ்.

     கமலாவின் அம்மா

    கமலாவின் அம்மா

    முழுக்க முழுக்க தன்னை ஒரு அமெரிக்கராக மட்டுமே அவர் கருதிக் கொள்பவர். அமெரிக்கர் என்றுதான் பெருமையாகவும் சொல்லிக் கொள்வார். எந்த சமயத்திலும் அவர் தன்னை பெருமைமிகு இந்தியராக காட்டிக் கொண்டதும் இல்லை. கமலாவின் தாய் தன்னை ஒக்லாந்தின் கருப்பின கலாச்சாரத்திற்கு மாற்றிக் கொண்டவர்... அவர் தனது இரு மகள்களையும் கருப்பின கலாச்சாரத்தின் படியே வளர்த்தார். அதாவது அமெரிக்க இந்தியராக அவர்களை வளர்க்கவில்லை.. மாறாக அமெரிக்க கருப்பர்களாகவே வளர்த்தார்.

     கருப்பின பெண்

    கருப்பின பெண்

    "நாங்கள் வாழ சென்ற இடம் என்னையும் எனது சகோதரியையும் கருப்பின பெண்களாகத்தான் பார்க்கும்.. எனவே நாங்கள் தன்னம்பிக்கைக் கொண்ட கருப்பின பெண்களாக வளர்க்கப்பட வேண்டும் என்பதில் எனது தாய் உறுதியாக இருந்தார்," என்று கமலாவே ஒரு பேட்டியில் கமலா குறிப்பிட்டிருந்தார். ஆக மொத்தத்தில் ஒரு இந்தியராக கமலாவைப் பற்றிப் பெருமை நமக்கு எதுவுமே இல்லை என்பதே நிதர்சனம்.

     அடையாளம்

    அடையாளம்

    அதேசமயம், அவர் பல்வேறு இனங்களின் கலவையாக அடையாளமாக திகழ்கிறார். தந்தை ஜமைக்கன், தாயார் இந்தியர், கணவர் யூதர் என, இவர் அமெரிக்கர் என கூட்டுக் கலவையாக மாறி நிற்கிறார். இந்நிலையில் கமலாவின் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. அதில் அவர் பன்றிக்கறி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்.. பன்றிக்கறியுடன் மாட்டுக்கறி இறைச்சியையும் விரும்பி சாப்பிடுவாராம் கமலா.

     கமலாவை பிடிக்குமா?

    கமலாவை பிடிக்குமா?

    இவரை ஒரு சாரார் தற்போது தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.. நம் நாட்டில் மாட்டுக்கறிக்கு,எதிரான கோஷ்டி உள்ளது.. அதற்கு எதிரான வன்முறைகளையும் நாடு தொடர்ந்து பார்த்து வருகிறது. இந்த நிலையில் நிச்சயம் இங்குள்ள பலருக்கு கமலாவை எந்த அளவுக்குப் பிடிக்கும் என்று தெரியவில்லை. அதேசமயம், அமெரிக்கா வாழ் இந்தியர்களுக்குமே கூட கமலாவைப் பிடிக்குமா என்பதும் கேள்விக்குறிதான்.

    English summary
    "Finally got my pork chop".. says kamala harris
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X