சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கிகள் ஈஎம்ஐ பிடிப்பது தவறு.. புகார் அளித்தால் நடவடிக்கை.. அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்கிகள் ஈஎம்ஐ பிடிப்பது தவறு என்றும் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதன் பரவலை தடுக்க மே 31 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கில் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள், கடைகள், தியேட்டர்கள், பள்ளிகள், கல்லூரிகள், கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

இந்த ஊரடங்கால் பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தினக்கூலி தொழிலாளர்கள், மாதாந்திர சம்பளதாரர்கள், தொழிலதிபர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல தளர்வுகள் கொடுக்கப்பட்டாலும் வருமானமின்றியும் சம்பள குறைப்பாலும் மீள முடியாமல் தவிக்கிறார்கள்.

ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது ஊரடங்கு நீட்டிப்பு பற்றி இன்று மத்திய அரசு அறிவிப்பு? சென்னை உட்பட 13 நகரங்களுக்கு தளர்வு இருக்காது

வங்கிகள்

வங்கிகள்

வீட்டு வாடகை, மின்சார கட்டணம் போன்றவற்றை கூட செலுத்த முடியாமல் அவதிப்படுகிறார்கள். வங்கிகளில் வீடு கட்டவும், வாகனம் வாங்கவும் கல்விக்காகவும் கடன் வாங்கியவர்கள் மாதத்தவணை செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் வங்கிகளில் கடன் பெற்றவர்கள் 6 மாதங்களுக்கு ஈஎம்ஐ செலுத்தத் தேவையில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்தது.

ஈஎம்ஐ தொகை

ஈஎம்ஐ தொகை

வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை போக்கவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள சலுகைகளை வாடிக்கையாளர்கள் எப்படி பெறுவது என்பது குறித்த சந்தேகத்திற்கு வங்கி பதிலளிக்க ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலையில் மும்பை, சென்னை உள்ளிட்ட இடங்களில் வீடு, வாகனம், கல்விக் கடன் வாங்கியவர்களுக்கு சம்பந்தப்பட்ட வங்கிகளில் இருந்து இந்த மாதத்திற்கான ஈஎம்ஐ தொகை பிடிக்கப்பட்டுள்ளது.

பிடித்தம்

பிடித்தம்

இதுகுறித்து வங்கித் துறை அதிகாரிகள் கூறுகையில் 6 மாதங்களுக்கு கடன் தவணையை செலுத்த முடியாதவர்கள் ஈஎம்ஐ பிடித்தத்தை தள்ளி வைக்க வேண்டும் என முன் கூட்டியே வங்கிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் கடன் வாங்கியவர்களின் கணக்கிலிருந்து அதற்கான தொகை தானாகவே பிடித்தம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளன.

Recommended Video

    OTP எண்களை யாருக்கும் கொடுக்க வேண்டாம்.. பொதுமக்களுக்கு எச்சரிக்கை
    நடவடிக்கை

    நடவடிக்கை

    இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் வங்கி கடன்களுக்கான மாத தவணை செலுத்த 6 மாத அவகாசம் உள்ளது. அதை மீறி மாதத் தவணையை வசூல் செய்யும் வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

    English summary
    Finance Minister Nirmala Sitharaman says that Banks deducting EMI
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X