சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நல்லவேளை.. பிடல்காஸ்ட்ரோ, சேகுவேரா செத்துபோய்ட்டாங்க.. அன்று சீமான் காட்டம்.. இன்று பாய்ந்தது வழக்கு

2 வருடத்துக்கு முன்பு சீமான் பேசியதற்கு இன்று வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

Recommended Video

    சீமான் மீது வழக்கு பதிவு... இதான் காரணம்

    சென்னை: "எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவார்களே.. அதுதான் இருக்கிற மாநில அரசு, மத்திய அரசுக்கு கொடுக்குற அழுத்தம்" என்று 2 வருஷத்துக்கு முன்னாடி சீமான் பேசிய பேச்சுக்கு இப்போது வழக்கு பதியப்பட்டுள்ளது...

    கடந்த 2.10.2018ம் தேதி காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், காமராஜரின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    பிறகு செய்தியாளர்களிடமும் பேசினார்.. அப்போது, செய்தியாளர்கள் "முதல்வரும், துணை முதல்வரும் தங்களை பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா என்று சொல்லி கொள்கிறார்களே" என்று கேட்டனர்.

    காங்கிரசுக்கு அறிவுரை கூறும் குஷ்பு... கட்சி வளர்ச்சிகாக என்ன செய்துள்ளார்?காங்கிரசுக்கு அறிவுரை கூறும் குஷ்பு... கட்சி வளர்ச்சிகாக என்ன செய்துள்ளார்?

    அரசின் நிலைப்பாடு

    அரசின் நிலைப்பாடு

    அதற்கு பதிலளித்த சீமான், "முதல்ல நீங்க இந்த மாதிரி செய்திகளை கேட்கக்கூடாது... இது போன்ற கொடுமைகள் நடந்துவிடக்கூடாது என்பதற்காக தான் அவர்கள் முன்னாடியே செத்து போயிட்டாங்க" என்றார். இதையடுத்து, ராஜீகாந்தி கொலை வழக்கில், 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டனர்.. அதற்கு சீமான், "சட்டசபையை கூட்டி தீர்மானம் போடாமல், அமைச்சரவையை கூட்டி தீர்மானம் போட்டிருக்கிறது தமிழக அரசு.

    அழுத்தம்

    அழுத்தம்

    எய்ம்ஸ் மருத்துவமனை வருது.. எய்ம்ஸ் மருத்துவமனை வருது..ன்னு சொன்னார்கள்... ஆனால், நாங்கள் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே, அதுக்கான எந்த நிதியும் ஒதுக்கவில்லையே என்று மத்திய அரசு சொல்கிறது... நாங்கள் அழுத்தம் கொடுத்து கொண்டுதான் இருக்கிறோம் என்று இங்க இருக்கிற தமிழக அரசு சொல்லி கொண்டிருக்கின்றது... அப்படின்னா, அவர்கள் கொடுக்கும் அழுத்தம் என்பது என்ன?

    வழக்கு பதிவு

    வழக்கு பதிவு

    எஜமான் தூங்கும்போது கை, கால்களை பிடித்துவிடுவது தான் அவர்கள் கொடுக்குற அழுத்தம்... இது ஒரு வேடிக்கை விளையாட்டு... இதைதான் நாம ரசிச்சிக்கிட்டு இருக்கோம்" என்றார் சீமான்... இந்த பேச்சுக்குதான் தற்போது வழக்கு போடப்பட்டுள்ளது.. கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் அஜூ குமார் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏன் 2 வருஷம் கழித்து?

    ஏன் 2 வருஷம் கழித்து?

    தமிழக அரசுக்கு எதிராகவும், வன்முறையை தூண்டும் வகையிலும், இருபிரிவினரிடையே அமைதியைச் சீர்குலைப்பது, உள்நோக்கத்தோடு தவறான தகவல்களைப் பரப்புவது என்கிற வகையில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஆனால் 2 வருஷம் கழித்து ஏன்? இருந்தாலும் சீமான் அன்று சொன்னபடி 7 பேரும் விடுதலை ஆகவில்லை.. எய்ம்ஸ் ஆஸ்பத்திரியும் வரவில்லை..!!

    English summary
    fir registered naam tamizhar party seeman, speech in kamarajar death anniversary day, 2018
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X