சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னை அருகே சோகம்.. ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி

வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்

Google Oneindia Tamil News

Recommended Video

    ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து.. டிவி செய்தியாளர், தாய், மனைவி பலி-வீடியோ

    சென்னை: தாம்பரம் அருகே ப்ரிட்ஜ் வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம் - தாம்பரம் அருகே உள்ள பகுதி சேலையூர். இங்குள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி அருகே பிரசன்னா என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு வயது 32 ஆகிறது.

    நியூஸ் ஜெ.தொலைக்காட்சியின் சென்னை செய்தியாளராக பணியாற்றியவர். இவரது மனைவி அர்ச்சனா தனியார் பள்ளியில் டீச்சராக வேலை பார்த்து வருகிறார்.

    என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்!என்னை போட்டு சாகடிக்கறாங்கம்மா.. எங்கம்மா இருக்கே.. பதறல் வீடியோ.. குவியும் கண்டனங்கள்!

    மூச்சு திணறல்

    மூச்சு திணறல்

    நேற்று நள்ளிரவு, பிரசன்னா, அவரது மனைவி, தாய் ரேவதி மூவரும் தூங்கி கொண்டிருந்தபோது வீட்டில் இருந்த ஃப்ரிட்ஜ் திடீரென வெடித்தது. இதனால் அறை முழுவதும் புகை மூட்டமானதால் 3 பேருக்குமே மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் அவர்களால் தப்பித்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டு தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    புகை வந்தது

    புகை வந்தது

    இன்று காலை இவர்களது வீட்டுக்கு வேலைக்கார பெண் வந்து கதவை தட்டி உள்ளார். நீண்ட நேரம் கதவு திறக்கப்படவில்லை. மேலும் வீட்டிற்குள் இருந்து புகை வந்து கொண்டிருப்பதை பார்த்த அந்த பெண் பதறியடித்து கொண்டு, அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    அவர்கள் விரைந்து வந்து கதவை உடைத்து கொண்டு சென்றபோது, 3 பேருமே உடல் கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உடனடியாக தீயணைப்பு துறையினர் மற்றும் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடல்களை கைப்பற்றி விசாரணையை துவங்கி உள்ளனர். செய்தியாளர் குடும்பத்துடன் உயிரிழந்த சம்பவம் மீடியா உலகில் பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    English summary
    Fire Accident near Tambaram and 3 died due including News J TV Reporter due to electrical problem
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X