சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முதலில் நல்ல மனிதராக இருங்கள்.. பிறகு கிருஷ்ணர், அர்ஜுனராக ஆகலாம்.. ரஜினிக்கு சீமான் நெத்தியடி!

பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    முதலில் நல்ல மனிதராக இருங்கள்:ரஜினிக்கு சீமான் பதில்

    சென்னை: பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்திற்கு நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.

    நேற்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் சிறப்பு அதிகாரம் நீக்கப்பட்டதற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன் என்று குறிப்பிட்டார். அதேபோல் அமித் ஷாவை வாழ்த்தியும் அவர் பேசினார்.

    அவரின் பாஜக சார்பான பேச்சு பெரிய சர்ச்சையாகி உள்ளது. ரஜினிகாந்த் ரசிகர்களே சிலர் அவருக்கு எதிராக இதனால் கருத்து தெரிவித்துள்ளனர்.

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    ரஜினிகாந்த் தனது பேச்சில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.அமித் ஷாவும் மோடியும், கிருஷ்ணனும் அர்ஜுனனும் போன்றவர்கள். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது. அவரது பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது. இப்போது அமித் ஷா யார் என்று மக்களுக்கு தெரிந்து இருக்கும், என்று குறிப்பிட்டார்.

    சீமான் பதில்

    சீமான் பதில்

    இதற்கு தற்போது நாம் தமிழர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ரஜினி சொல்வது எல்லாம் சரிதான். இந்த கிருஷ்ணரும், அர்ஜுனரும் யார் மீது போர் தொடுக்க போகிறார்கள் என்றுதான் தெரியவில்லை. அதுதான் தற்போது முக்கியமான கேள்வி. மக்கள் மீதுதான் இவர்கள் போர் தொடுக்க போகிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ஆனால்

    ஆனால்

    நீங்கள் அவதாரங்களாக அப்புறம் இருக்கங்கள். முதலில் நல்ல மனிதர்களாக இருங்கள். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் நல்ல மனிதர்களாகவும், தலைவர்களாகவும் இருக்க வேண்டும். முதலில் மக்களை பாதிக்கும் திட்டங்களை அரசு கைவிட வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டு இருக்கிறார்.

    கருத்து

    கருத்து

    இந்த நிலையில் சீமானின் கருத்தை கேட்டு இந்து அமைப்புகளும், ரஜினி ரசிகர்களும், பாஜக கட்சியினரும் கொந்தளித்து இருக்கிறார்கள். எங்களை சீண்டுவதே சீமானின் வெளியாகிவிட்டது என்று விமர்சனம் வைத்துள்ளனர். இதனால் இணையத்தில் பெரும் சண்டை நடந்து வருகிறது.

    English summary
    First, be a human being, Than try to be an Avatar replies Seeman to Rajinikanth yesterday speech.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X