சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சந்தோஷுக்கு ரொம்பத்தான் தைரியம்.. ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும்.. சேட்டையை பாருங்க!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய நபருக்கு ரூ 10ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: சந்தோஷுக்கு ரொம்பதான் தைரியம்.. 10 ஆயிரம் ரூபாய் ஃபைன் போடுவார்கள் என்று தெரிந்தும் பைக் ஓட்டி வந்துள்ளார்... போலீசாரிடம் வசமாக சிக்கிவிட்டார்!

நிறைய சாலை விபத்துக்கள் ஏற்படுவதால், அதை தவிர்க்கும் பொருட்டு தண்டனை, அபராதத்தையும் கடந்த மாதம் மத்திய அரசு கடுமையாக்கியது.

First Drunk and Drive Rupees 10 Thousand fine in Chennai

அதன்படி, ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல், மறித்தபடி செல்வோருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம், லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டினால் ரூ.5 ஆயிரம், வண்டிகளில் அதிக பாரம் ஏற்றினால் ரூ.20 ஆயிரம் உள்ளிட்ட அபராதம் அறிவிக்கப்பட்டது.

மேலும் அதிக வேகமாக வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் என்பது ரூ.5 ஆயிரமாகவும், குடித்துவிட்டு வண்டி ஓட்டினால் ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இவ்வளவு அபராதம் சொன்னால், அப்படியாவது விபத்துக்கள் குறையும், வாகன ஓட்டிகளும் விதிகளை கடைப்பிடிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

First Drunk and Drive Rupees 10 Thousand fine in Chennai

அதற்காகத்தான் இந்த மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவிற்கு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இப்போது பலர் இந்த விதிகளை கடைப்பிடித்தாலும், இன்னமும் சிலர் கோக்குமாக்கு செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மசோதா அமலுக்கு வந்தநிலையில், சென்னையில் சந்தோஷ் என்பவர் முதல் நபராக சிக்கி விட்டார். குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றத்துக்காக சந்தோஷுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் பெருநகர நீதிமன்றத்தில் இந்த தொகையை செலுத்தி உள்ளார் சந்தோஷ்.

English summary
First 10 thousand Rupees fine under MVA amendment act in Chennai for Drunk and Drive case
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X