சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிளாஸ்மா சிகிச்சை தமிழ்நாட்டில் வெற்றி... பிளாஸ்மா தானம் செய்ய முன்வாருங்கள் - அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பிளாஸ்மா சிகிச்சை வெற்றி பெற்றிருக்கிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பிளாஸ்மா வங்கியை

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதன்கிழமை தொடங்கி வைத்தார். அமைச்சர், பிளாஸ்மா வங்கி 7 இடங்களில் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த பிளாஸ்மா வங்கிகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், "கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமல்லாமல் கொரோனாவால் பாதிப்படைத்தவர்களை குணப்படுத்துவதில் பல்வேறு யுக்திகளை செயல்பாடுகளுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்.

நல்ல முன்னேற்றம்.. முதல் தடுப்பூசி மக்களுக்கு எப்போது போடப்படும்.. உலக சுகாதார அமைப்பு பதில் நல்ல முன்னேற்றம்.. முதல் தடுப்பூசி மக்களுக்கு எப்போது போடப்படும்.. உலக சுகாதார அமைப்பு பதில்

முதல் பிளாஸ்மா வங்கி

முதல் பிளாஸ்மா வங்கி

பிளாஸ்மா வங்கிக்கு முதல்வரின் ரூ.2.34 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீட்டின் பேரில் பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பிளாஸ்மா வங்கி மத்திய அரசின் ஐசிஎம்ஆர் சார்பாகவும் பொது சுகாதார சேவை இயக்குனரகம் மருந்து கட்டுபாடு நிர்வாகத்தின் சார்பாகவும் பரிசோதனை அடிப்படையில் நடந்தது. பரிசோதனை வெற்றிகரமாக முடிந்தது.

வெற்றிகரமான பிளாஸ்மா சிகிச்சை

வெற்றிகரமான பிளாஸ்மா சிகிச்சை

இந்த பிளாஸ்மா வங்கி பொதுமக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்மா நன்கொடையாளர்கள் 2 பேர் இன்று பிளாஸ்மா தானம் அளித்து தொடங்கியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இந்த பிளாஸ்மா வங்கியில் 7 பேர் தானம் அளிக்கக் கூடிய வகையில் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. அதனால், தமிழகத்தில் பிளாஸ்மா சிகிச்சை வெற்றி அடைந்திருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

பிளாஸ்மா தானம் எப்படி

பிளாஸ்மா தானம் எப்படி

ஒருவருக்கு கொரோனா பாஸிட்டிவ் தொற்று ஏற்பட்டு குணமாகி அவருக்கு நெகட்டிவ் என்று பரிசோதனை முடிவு வந்த பிறகு, 14 நாட்களுக்குப் பிறகு, ரத்த தானம் செய்வதற்கு உள்ள விதிமுறைகளுடன் அவர்க்ள் பிளாஸ்மா தானம் செய்வதற்கு தகுதி உடைவர்கள் ஆகிறார்கள்.

பிளாஸ்மா பாதுகாப்பு

பிளாஸ்மா பாதுகாப்பு

இந்த பிளாஸ்மாவை நாம் 40 டிகிரி செல்சியஸ் அளவில் குளிர் நிலையில் வைத்திருப்போம். ஓராண்டு வரை இந்த பிளாஸ்மாவை பயன்படுத்துகிறோம். பிளாஸ்மா என்றால் பிளாஸ்மா மட்டும்தான் எடுப்போம். ரத்தம் கருவிக்குள் சென்று அதில் பிளாஸ்மா மட்டும் பைக்குள் வரும் ரத்தம் மீண்டும் அவர்களின் உடலுக்குள் சென்று விடும். ஆகையினால், அவர்களும் புத்துணர்ச்சியாக உணர்வார்கள்.

தமிழகம் நம்பர் 1

தமிழகம் நம்பர் 1

ஏற்கனவே, தமிழகத்தில் கண் தானமாக இருந்தாலும், ரத்த தானமாக இருந்தாலும், உடலுறுப்பு தானமாக இருந்தாலும் தானம் செய்வதில் மிகச் சிறந்த மாநிலம் தமிழ்நாடு. அதனால், இந்த பிளாஸ்மா சிகிச்சையில் முதலமைச்சர் ஏறகனவே வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ஏற்கனவே, நாம் 1 லட்சத்து 21 ஆயிரம் பேர்களுக்கு மேல் குணப்படுத்தி அனுப்பியிருக்கிறோம். குணமடைந்த அனைவரும் துணை நோய் எதுவும் இல்லாதவர்கள் அனைவருமே பிளாஸ்மா கொடுப்பதற்கு தகுதி உடையவர்கள் ஆவர். அனைவரும் பிளாஸ்மா கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்பதை அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எங்கெங்கு பிளாஸ்மா வங்கிகள்

எங்கெங்கு பிளாஸ்மா வங்கிகள்

தமிழக அரசு தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையைத் தொடர்ந்து, ஸ்டான்லி மருத்துவமனை, ஓமந்தூரார் மருத்துவமனை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், திருச்சி, மதுரை, சேலம், கோவை, திருநெல்வேலி ஆகிய மருத்துவக் கல்லூர் மருத்துவமனைகளிலும் இந்த பிளாஸ்மா வங்கிகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

நர்ஸ்களின் சிறப்பான பணி

நர்ஸ்களின் சிறப்பான பணி

ராஜீவ் காந்தி மருத்துவமனையைப் பொருத்தவரைக்கும் 93,000 பேர்களுக்கு கொரோனா ஸ்வாப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. 9,280 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருக்கிறார்கள். ஐசியுவில் இருப்பவர்கள் உணவருந்த முடியாத நிலையில் இருப்பவர்களுக்கு ஊட்டி விடுவதற்கு உதவி செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். உயர்தர சிகிச்சையை ராஜீவ் காந்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் செவிலியர்கள் உள்ளார்ந்த அன்புடன் செய்து வருகிறார்கள். அவர்களுக்கு முதலமைச்சரின் சார்பில் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

English summary
The first #PlasmaBank in TN at gmcrgggh was dedicated for the state today. TN HS, Dean, Directors & officials were present. Plasma retrieval will be done in 30 minutes, stored at 40° and used for Covid patients.Come forward and donate plasma.Together, let’s save lives says Minister Vijayabaskar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X