"அவர்" வேற இங்கே வர போறாரு.. "ஸ்டாலினா இப்படி?".. வார்த்தையை விட்ட அழகிரி.. அப்ப அவ்ளோதானா?
சென்னை: இத்தனை நாள் பொருமலில் இருந்த தமிழக காங்கிரஸ், இன்று தன்னுடைய அதிருப்தியை திமுக மீது வெளிப்படுத்தி உள்ளது.
ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளனை, சுப்ரீம் கோர்ட் விடுவித்தது.. இதையடுத்து, முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தித்து பேசினர்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களையும் பேரறிவாளன் சந்தித்து பேசினார்.
வெளுத்து வாங்கிய ஸ்டாலின்! வியர்த்து விறுவிறுத்துப் போன திமுக மாவட்டச் செயலாளர்கள்! கச்சேரி இருக்கு

முதுகில் தட்டிய முதல்வர்
ஆனால், முதல்வர் ஸ்டாலினின் சந்திப்பின்போது, பேரறிவாளன் முதுகில் தட்டிக் கொடுத்துள்ளார் ஸ்டாலின்... இது பலராலும் விமர்சிக்கப்பட்டது.. பேரறிவாளன் விடுதலையாலும் முதல்வர் ஸ்டாலின் அவரை அரவணைத்ததாலும் காங்கிரஸார் கடும் அதிருப்திக்கு ஆளாகிவிட்டனர்.. சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை விமர்சிக்கவில்லை என்றாலும், அதை ஏற்றுக் கொண்டு, பேரறிவாளன் விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸார் வாயில் துணியைக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்...

ராஜினாமா
இதனால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு மிகப்பெரிய சிக்கலையும் தர்மசங்கடத்தையும் இது ஏற்படுத்தியது. இதனால் திமுக கூட்டணியை விட்டு, வெளியேற வேண்டும் என்று சில காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் பதவியையும் ராஜினாமா செய்தனர்.. மேலும் பலர் கடுப்பில் உள்ளனர்.. எனினும், கொள்கை வேறு, அரசியல் வேறு என்று சொல்லி, திமுக கூட்டணியில்தான் காங்கிரஸ் இன்னமும் உள்ளது..

சீட் விவகாரம்
திமுக தரும் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் பெற்றுக் கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகி உள்ளது. இப்படி பேரறிவாளன் விவகாரமே இன்னும் தீர்ந்தபாடில்லை.. அதற்குள் அடுத்த தர்மசங்கடம் காங்கிரசுக்கு வந்துவிட்டது.. பிரதமரின் சென்னை வருகையும், அரசு விழாவில் பங்கேற்று திமுகவுடன் நெருக்கம் காட்டியதால், கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கையை பிசைந்து கொண்டிருக்கிறது..

தேவை
மோடி பங்கேற்ற நிகழ்ச்சி என்றாலும், திமுகவை இப்போதுவரை திட்டி தீர்த்து கொண்டிருக்கிறது தமிழக பாஜக.. இந்நிலையில், முதல்முறையாக தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். சென்னை ஏர்போர்ட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, "பெட்ரோல், டீசல் விலையை மோடி குறைக்காமல் நீண்ட காலமாக இருந்தார்... ஆனால், ஸ்டாலின் முதல்வர் ஆனதும் உடனடியாக பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்தார். பாஜக செய்யும் அரசியல் பொதுமக்களிடம் எடுபடாது.

தெலுங்கானா
ஒரு மாநிலத்திற்கு என்ன வேண்டும் என முதலமைச்சர் சொல்வது எப்படி நாடகம் ஆகும். மாநிலத்தின் தேவையை கேட்ட முதலமைச்சருக்கு அருகதை, உரிமை இல்லையா? மத்திய அரசுக்கு மாநில அரசு பாக்கி வைத்திருந்தால் தவறில்லை. ஆனால் தர வேண்டியதை தராமல் இருப்பது தான் தவறு. சேர வேண்டிய திட்டங்கள் சேரவில்லை என்பது தான் முதல்வர் குற்றச்சாட்டு. அண்ணாமலை முழங்காலுக்கும் உச்சந்தலைக்கும் முடிச்சு போடுவது தவறு.

பெருந்தன்மை
ஏற்கனவே தொடங்கி வைத்த திட்டங்களை மீண்டும் தொடங்கி வைத்த ஒரே பிரதமர் மோடிதான்... விழாவில் முதல்வர் பெருத்தன்மையுடன் சென்றுள்ளார். ஆனால் பிரதமர் விழாவில், முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டிருக்க கூடாது... பிரதமரின் சுற்றுப்பயணத்தை தெலுங்கானா முதல்வர் புறக்கணித்தார்... பிரதமர் வந்தால் வளர்ச்சி திட்டங்களை பற்றி பேசாமல் அரசு மேடைகளில் அரசியல் செய்கிறார் என்பதால், தெலுங்கானாவில் புறக்கணிக்கின்றனர். ஆனால் தமிழக முதலமைச்சர் விழாவில் கலந்து கொண்டது துர்திஷ்டவசமானது" என்றார்.

ஆர்எஸ்எஸ்
அழகிரி இப்படி வெளிப்படையாக சொல்லி உள்ளார் என்றாலும், விழாவுக்கு முன்னதாக இது தொடர்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.. மோடி வந்து போனதுக்கே இப்படி என்றால், இன்று வெங்கையா நாயுடு வந்து போக போகிறார்.. ஆர்எஸ்எஸ்ஸில் மிகவும் ஆழ்ந்த பிடிப்புள்ள வெங்கையா நாயுடுவின் வருகையை காங்கிரஸ் எப்படி எதிர்நோக்க போகிறது? திமுக மீது தன்னுடைய அதிருப்தியை எப்படி வெளிப்படுத்த போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்..!