சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மீனவர்களின் துயரம் விரைவில் தீரும்.. நாகை மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில்... கமல் ட்வீட்

Google Oneindia Tamil News

சென்னை: அறியாமல் எல்லையைத் தாண்டினாலும் ஆபத்து, பாதுகாப்பான பகுதிகளில் மீன் பிடித்தாலும் திடீர் புயல்களால் அபாயம் என்று இருக்கும் மீனவர்களின் துயரம் விரைவில் தீரும் என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்

அரபிக் கடலில் உருவாகியுள்ள அதி தீவிர 'டவ்தே' புயல் காரணமாகத் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த 4 நாள்ல பாருங்க.. களமிறங்கிய 3 அமைச்சர்கள்.. எல்லா திசையிலும் பறந்த

இந்த டவ்-தே புயலானது இப்போது மும்பையிலிருந்து தென்மேற்கே 270 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் 19 கிமீ வேகத்தில் வடமேற்கு திசையை நோக்கி நகர்வதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 நாகை மீனவர்கள் மாயம்

நாகை மீனவர்கள் மாயம்

இந்த டவ்-தே புயல் காரணமாகக் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், கடலுக்குச் சென்றுள்ள மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரைக்குத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், விசைப்படகில் சென்று நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணிகள் தற்போது நடந்து வருகிறது.

 கமல் ட்வீட்

கமல் ட்வீட்

இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "அறியாமல் எல்லையைத் தாண்டினாலும் ஆபத்து. பாதுகாப்பான பகுதிகளில் மீன் பிடித்தாலும் திடீர் புயல்களால் அபாயம் என்று மீனவர்களின் துயர அலைகள் ஓயாததாகவே உள்ளது. கேரளத்தின் அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த நம் நாகை மீனவர்கள் என்னவானார்கள் எனத் தெரியாத நிலையில் தேடப்பட்டுவருகிறார்கள். மீனவச் சகோதரர்களின் துயரம் தீரும் நாள் வரவேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

 என்ன ஆகியிருக்கும்

என்ன ஆகியிருக்கும்

கடந்த 2-ம் தேதி கொச்சி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசை படகில் சென்ற நாகை பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து வந்தனர். டவ் தே புயல் குறித்த எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டதால் அவர்கள் உடனடியாக கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் சிக்கியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Array

Array

மகாராஷ்டிரா, குஜராத் மீனவர்களுக்கும் இதேபோல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 18 படகுகள், குஜராத்தில் ஒரு படகைத் தவிர அனைத்தும் கடலிலிருந்து திரும்பிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படகுகளும் இன்னும் சில மணி நேரங்களில் கரைக்குத் திரும்பிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
MNM chief Kamal latest tweet about Nagai fishermen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X