• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பிளாஷ்பேக் 2018: டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா.. புயலுக்கே மீம்ஸ் போட்டதை மறக்க முடியுமா?

|
  டெல்டா மாவட்டங்களையே புரட்டி போட்ட கஜா : பிளாஷ்பேக் 2018- வீடியோ

  சென்னை: ஒவ்வொரு ஆண்டிலும் நிகழ்ந்த மகிழ்ச்சியான தருணங்களை எப்படி நம்மால் மறக்க முடியாதோ அது போல் நமக்கு துயரத்தை அளித்த இயற்கைச் சீற்றங்களையும் நம்மால் மறக்க முடியாது.

  அந்த வகையில் இந்த ஆண்டின் பெரும் சேதத்தையும் மழையையும் வரவழைத்தது என்றால் அது கஜா புயல்தான். வழக்கமாக அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்துக்கு பலனை அளிக்கக் கூடிய வடகிழக்கு பருவமழை பெய்யும்.

  அதன்படி 2018-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. அந்த மாதத்தில் அவ்வப்போது மழை பெய்தது. இந்நிலையில் வங்கக் கடலில் ஒரு புயல் உருவானது. இதற்கு கஜா என இலங்கை பெயர் வைத்தது. இந்த புயல் இந்த ஆண்டில் உருவான 5-ஆவது புயல் ஆகும். முதலில் சாகர், மேகுனு, லூபன் மற்றும் டிட்லி ஆகிய புயல்கள் உருவாகியிருந்தன.

  பாதிப்பு

  பாதிப்பு

  கஜா புயல் கடந்த நவம்பர் 10-ஆம் தேதி நாகை- வேதாரண்யம் இடையே கரையை கடந்தது. அப்போது காற்றின் வேகம் 110 கி.மீ. வேகத்தில் இருந்தது. இந்த புயலால் புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சை, பட்டுக்கோட்டை, புதுச்சேரி, காரைக்கால், நாகை, வேதாரண்யம் ஆகிய இடங்களில் பெரும் பாதிப்பை உருவாக்கியது.

  விவசாயி

  விவசாயி

  நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஏராழமான ஏக்கர்களில் பயிரிடப்பட்ட தென்னை மரங்கள் வேரோடு சாய்ந்தன. இது போல் தென்னை மரங்களை வளர்த்து அதன் மூலம் வாழ்வாதாரம் தேட விவசாயிகளுக்கு பல ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும்.

  பலி

  பலி

  தென்னை மட்டுமல்லாமல் நெல், பணப்பயிர்களும் நாசமாகின. மின் கம்பங்களும் மரங்களும் முறிந்து விழுந்தன. புயலால் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்ததோடு வீடுகளையும் கால்நடைகளையும் இழந்துவிட்டன. கோடியக்கரையில் உள்ள சரணாயலத்தில் விலங்குகள் இறந்து கிடந்தன. இந்த புயலால் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

  நிதி ஒதுக்குதல்

  நிதி ஒதுக்குதல்

  புயல் பாதிப்புகள் முடிந்து ஒரு மாதமாகியும் சில இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்தன. மின்வாரிய சீரமைப்பு பணிகளும் கூடுமானவரை துரிதமாகவே நடைபெற்றன. தமிழகத்துக்கு ரூ. 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குமாறு தமிழக அரசு கேட்டுள்ளது. ஆனால் மத்திய அரசோ மிகவும் சொற்பமான தொகையையே கொடுத்தது.

  கொப்பளிப்பு

  கொப்பளிப்பு

  இந்த புயல் இப்போது வருது அப்போது வருது என வானிலை அறிக்கையின் ஆய்வை கிண்டல் செய்து மீம்ஸ்கள் போடப்பட்டன. ஆனால் கஜா வராண்டா, கஜா வராண்டாவில் வரும் விஜயகாந்த் கண்களில் கோபத்தை கொப்பளித்தது போல் இந்த புயல் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு சென்றது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Flash back 2018: Gaja cyclone gives unforgottable experience to the people who teases by creating memes.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more